• May 20 2024

இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் போராளியை கட்டுநாயக்கவில் வைத்தே கைது செய்த ரிஐடி! SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 8:11 am
image

Advertisement

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருகோணமலையை சேர்ந்த செல்லபாக்கியம் சுதாகரன் என்ற குறித்த நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார். 


அங்கிருந்து படகு வழியாக இலங்கைக்கு வர முயற்சித்த போது கைது செய்யப்பட்டு இந்தியா திருச்சி சிறப்பு முகாமில் கடந்த இரண்டரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

அவருடைய வழக்கு விசாரணைகள் முடிவுற்று கடந்த 25 ஆம் திகதி இலங்கைக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டார். 


அப்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த நபர் தற்போது நாலாம் மாடியில் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு பாதுகாப்பு அமைச்சில் இருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது. 


இன்று வரை அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என உறவினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் போராளியை கட்டுநாயக்கவில் வைத்தே கைது செய்த ரிஐடி SamugamMedia இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த செல்லபாக்கியம் சுதாகரன் என்ற குறித்த நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து படகு வழியாக இலங்கைக்கு வர முயற்சித்த போது கைது செய்யப்பட்டு இந்தியா திருச்சி சிறப்பு முகாமில் கடந்த இரண்டரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவருடைய வழக்கு விசாரணைகள் முடிவுற்று கடந்த 25 ஆம் திகதி இலங்கைக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டார். அப்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த நபர் தற்போது நாலாம் மாடியில் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு பாதுகாப்பு அமைச்சில் இருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது. இன்று வரை அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என உறவினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement