வீதி ஒழுங்கு, பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டவிதிமுறைகளைப் பின்பற்றாமல் வாகனங்களைச் செலுத்தும் நபர்களினால் எதிர்பாராத விதமாக ஏற்படும் வாகன விபத்துச் சம்பவங்கள், அங்கவீனமடைதல் மற்றும் மரணம் சம்பவிக்கும் போது வாகன சாரதிகளுக்கு ஏற்படும் கஷ்டங்களைத் தவிர்ப்பதற்காக விழிப்புணர்வுச் செயலமர்வொன்று பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளால் பூரண விளக்கமளிக்கப்பட்டன.
அதற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரும்,சோஸியல் றெகுலேட்டர் அமைப்பும் இணைந்து அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,பாலமுனை, ஒலுவில் உட்பட மற்றும் கிராமங்களில் வதியும் வாகனம் செலுத்துவதில் ஆர்வம் கொண்ட நபர்களுக்காக இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமை, வாகன உரிமை மாற்றம் செய்யப்படாமை, ஏனைய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளாமல் வாகனங்களைச் செலுத்தும் நபர்களில் இளவயதினரும் அதிகமாக காணப்படுகின்றனர்.
இதுதொடர்பாக அண்மையில் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எச்.ஹஸிப் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்
கல்முனை பொலிஸ் நிலைய மோட்டார் வாகனப் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் பி.ரி.நஸிர் பிரதம வளவாளராகக் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். இதுதவிர உதவி பொலிஸ் பரிசோதகர் கே.எல்.முஸ்தபா போதைப் பொருள் பாவனை தொடர்பில் விளக்கமளித்தார்.
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP)எம்.ஏ.நவாஸ் பார்வையாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வீதி ஒழுங்கு சட்டவிதிமுறைகள் விழிப்புணர்வு செயலமர்வு வீதி ஒழுங்கு, பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டவிதிமுறைகளைப் பின்பற்றாமல் வாகனங்களைச் செலுத்தும் நபர்களினால் எதிர்பாராத விதமாக ஏற்படும் வாகன விபத்துச் சம்பவங்கள், அங்கவீனமடைதல் மற்றும் மரணம் சம்பவிக்கும் போது வாகன சாரதிகளுக்கு ஏற்படும் கஷ்டங்களைத் தவிர்ப்பதற்காக விழிப்புணர்வுச் செயலமர்வொன்று பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளால் பூரண விளக்கமளிக்கப்பட்டன.அதற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரும்,சோஸியல் றெகுலேட்டர் அமைப்பும் இணைந்து அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,பாலமுனை, ஒலுவில் உட்பட மற்றும் கிராமங்களில் வதியும் வாகனம் செலுத்துவதில் ஆர்வம் கொண்ட நபர்களுக்காக இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமை, வாகன உரிமை மாற்றம் செய்யப்படாமை, ஏனைய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளாமல் வாகனங்களைச் செலுத்தும் நபர்களில் இளவயதினரும் அதிகமாக காணப்படுகின்றனர்.இதுதொடர்பாக அண்மையில் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எச்.ஹஸிப் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்கல்முனை பொலிஸ் நிலைய மோட்டார் வாகனப் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் பி.ரி.நஸிர் பிரதம வளவாளராகக் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். இதுதவிர உதவி பொலிஸ் பரிசோதகர் கே.எல்.முஸ்தபா போதைப் பொருள் பாவனை தொடர்பில் விளக்கமளித்தார்.முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP)எம்.ஏ.நவாஸ் பார்வையாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.