• Nov 12 2024

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை!

Chithra / Mar 13th 2024, 3:20 pm
image

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா்  ஆகியோர் தமக்கான கடவுச்சீட்டு பெறுவதற்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவருக்கும் இலங்கை தூதரகத்தில் இன்று புதன்கிழமை  நோ்காணல் நடைபெற்று வருகின்றது.

மூவரும் அழைத்துச் செல்வதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்து வாழ விரும்புகிறோம்.

எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா்.

இதன்படி இன்று திருச்சி முகாமில் இருந்து  சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா்  ஆகியோர் தமக்கான கடவுச்சீட்டு பெறுவதற்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவருக்கும் இலங்கை தூதரகத்தில் இன்று புதன்கிழமை  நோ்காணல் நடைபெற்று வருகின்றது.மூவரும் அழைத்துச் செல்வதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்து வாழ விரும்புகிறோம்.எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா்.இதன்படி இன்று திருச்சி முகாமில் இருந்து  சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement