• Nov 22 2024

சிவராத்திரி தினத்தில் கைதானவர்கள் சிறையில் உண்ணாவிர போராட்டம்

Chithra / Mar 13th 2024, 3:25 pm
image

வவுனியா - வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில்  கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி பூஜையில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 8 பேரில் 5 பேர் நேற்றையதினம் முதல் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில்  கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆலயத்துக்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

நேற்றையதினம் காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள்  வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இந் நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல்பொருள் சின்னங்களைச் சந்தேகநபர்கள் சேதப்படுத்தினர் என்று மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து மேற்படி சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந் நிலையில் குறித்த 8 பேரில்,  கிந்துஜன், தவபாலன், மதிமுகராசா ஐயா, தமிழச்செல்வன், விநாயகமூர்த்தி ஆகிய ஐந்து பேரும் நேற்றையதினம் காலையிலிருந்து உணவின்றி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை  பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி, வவுனியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுக்க ஒன்றிணையுமாறு நல்லூர் சிவகுரு ஆதீன கர்த்தா தவத்திரு வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சிவராத்திரி தினத்தில் கைதானவர்கள் சிறையில் உண்ணாவிர போராட்டம் வவுனியா - வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில்  கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி பூஜையில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 8 பேரில் 5 பேர் நேற்றையதினம் முதல் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில்  கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆலயத்துக்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.நேற்றையதினம் காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள்  வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந் நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல்பொருள் சின்னங்களைச் சந்தேகநபர்கள் சேதப்படுத்தினர் என்று மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.இதனையடுத்து மேற்படி சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந் நிலையில் குறித்த 8 பேரில்,  கிந்துஜன், தவபாலன், மதிமுகராசா ஐயா, தமிழச்செல்வன், விநாயகமூர்த்தி ஆகிய ஐந்து பேரும் நேற்றையதினம் காலையிலிருந்து உணவின்றி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதேவேளை  பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி, வவுனியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுக்க ஒன்றிணையுமாறு நல்லூர் சிவகுரு ஆதீன கர்த்தா தவத்திரு வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement