• May 21 2024

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற மறுக்கும் ரோசி சேனாநாயக்க! samugammedia

Chithra / May 2nd 2023, 8:22 am
image

Advertisement

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, மாநகரசபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், மேயர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த ஒரு மாத கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்குமாறு மேல் மாகாண ஆளுநரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில், ரோசி சேனாநாயக்கவின் கோரிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதுடன்,கடும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாநகர ஆணையாளர் விடுத்துள்ள கடிதத்தில்,

மார்ச் 20ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் நாள் வரையான காலப்பகுதிக்கான நீர், மின்சாரம், தொலைபேசி மற்றும் ஏனைய வசதிகளுக்கான கட்டணங்களை முன்னாள் மேயர் தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற மறுக்கும் ரோசி சேனாநாயக்க samugammedia கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னதாக, மாநகரசபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், மேயர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.இருப்பினும், இந்த ஒரு மாத கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்குமாறு மேல் மாகாண ஆளுநரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், ரோசி சேனாநாயக்கவின் கோரிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதுடன்,கடும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கொழும்பு மாநகர ஆணையாளர் விடுத்துள்ள கடிதத்தில்,மார்ச் 20ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் நாள் வரையான காலப்பகுதிக்கான நீர், மின்சாரம், தொலைபேசி மற்றும் ஏனைய வசதிகளுக்கான கட்டணங்களை முன்னாள் மேயர் தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement