• Mar 07 2025

நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா; வடக்கு மீனவர்களின் துர்பாக்கியம்! ரஜீவன் எம்.பி. கவலை

Chithra / Mar 5th 2025, 3:32 pm
image


கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்படையின் தரவுகளின் படி நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் குறிப்பாக வடக்கு கடற்பகுதியில் இருந்து எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி இழுவைப் படகுகளால் சூறையாடப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.

பல மணி நேரம் தொடர்ச்சியாக இழுவை படகுகள் இயங்குவதன் மூலம் சூழல் மாசடைகிறது, எமது வடபகுதி மீனவர்கள் நவீன தொழில்நுட்ப முறைகள் அற்ற இயற்கை உடன் கூடிய மரபு ரீதியான முறைகளைப்  பயன்படுத்தியே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் இந்த முறையானது மீன்வளத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. 

கடற்றொழில்  அமைச்சு மற்றும் கடற்படையின் தரவுகளின் படி நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் குறிப்பாக வடக்கு கடற்பகுதியில் இருந்து எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி இழுவைப் படகுகளால் சூறையாடப்படுகின்றது. 

ஆனால் எமது மீனவர்கள் எந்த வித போதிய வருமானமும் இன்றி வாழ்வாதாரத்திற்கு ஏங்கும் மக்களாகக்  காணப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா; வடக்கு மீனவர்களின் துர்பாக்கியம் ரஜீவன் எம்.பி. கவலை கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்படையின் தரவுகளின் படி நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் குறிப்பாக வடக்கு கடற்பகுதியில் இருந்து எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி இழுவைப் படகுகளால் சூறையாடப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.பல மணி நேரம் தொடர்ச்சியாக இழுவை படகுகள் இயங்குவதன் மூலம் சூழல் மாசடைகிறது, எமது வடபகுதி மீனவர்கள் நவீன தொழில்நுட்ப முறைகள் அற்ற இயற்கை உடன் கூடிய மரபு ரீதியான முறைகளைப்  பயன்படுத்தியே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.இதனால் இந்த முறையானது மீன்வளத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. கடற்றொழில்  அமைச்சு மற்றும் கடற்படையின் தரவுகளின் படி நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் குறிப்பாக வடக்கு கடற்பகுதியில் இருந்து எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி இழுவைப் படகுகளால் சூறையாடப்படுகின்றது. ஆனால் எமது மீனவர்கள் எந்த வித போதிய வருமானமும் இன்றி வாழ்வாதாரத்திற்கு ஏங்கும் மக்களாகக்  காணப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement