• Apr 23 2026

சாதனை படைத்த கிராமப்புற மாணவிகள்: வலய மட்ட எல்லே போட்டியில் வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம் இரண்டாம் இடம்!

shanu / Apr 23rd 2026, 5:18 pm
image

வவுனியா தெற்கு வலய பாடசாலைகளுக்கு இடையிலான 2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இதில் பெண்களுக்கான எல்லேப் போட்டியில், வவுனியாவின் பின்தங்கிய கிராமப்புறப் பாடசாலையான வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.


வசதி வாய்ப்புகள் அதிகம் கொண்ட நகரப் பாடசாலைகளுடன் மோதி, இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்த மாணவிகளின் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றதன் மூலம், எதிர்வரும் வடமாகாண மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியையும் இவர்கள் உறுதி செய்துள்ளனர்.


வ/ ஸ்ரீ நாகராஜா வித்தியாலயமானது உயர்தர வகுப்புகள் இன்றி, சாதாரண தரம் (G.C.E O/L) வரை மட்டுமே கொண்ட ஒரு சிறிய பாடசாலையாகும். இத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுக்கு மத்தியிலும், மாணவிகளின் விடாமுயற்சியும் பயிற்சியாளர் ஜெ. மோகன் அவர்களின் முறையான வழிகாட்டலும் இந்த மாபெரும் வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளது.


கிராமப்புற மாணவர்கள் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் மாகாண ரீதியில் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த வெற்றி ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.


வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த மாணவிகளுக்கும், அவர்களைப் பக்குவப்படுத்திய பயிற்சியாளர் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும் வவுனியா கல்விச் சமூகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


சாதனை படைத்த கிராமப்புற மாணவிகள்: வலய மட்ட எல்லே போட்டியில் வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம் இரண்டாம் இடம் வவுனியா தெற்கு வலய பாடசாலைகளுக்கு இடையிலான 2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதில் பெண்களுக்கான எல்லேப் போட்டியில், வவுனியாவின் பின்தங்கிய கிராமப்புறப் பாடசாலையான வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.வசதி வாய்ப்புகள் அதிகம் கொண்ட நகரப் பாடசாலைகளுடன் மோதி, இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்த மாணவிகளின் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றதன் மூலம், எதிர்வரும் வடமாகாண மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியையும் இவர்கள் உறுதி செய்துள்ளனர்.வ/ ஸ்ரீ நாகராஜா வித்தியாலயமானது உயர்தர வகுப்புகள் இன்றி, சாதாரண தரம் (G.C.E O/L) வரை மட்டுமே கொண்ட ஒரு சிறிய பாடசாலையாகும். இத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுக்கு மத்தியிலும், மாணவிகளின் விடாமுயற்சியும் பயிற்சியாளர் ஜெ. மோகன் அவர்களின் முறையான வழிகாட்டலும் இந்த மாபெரும் வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளது.கிராமப்புற மாணவர்கள் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் மாகாண ரீதியில் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த வெற்றி ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த மாணவிகளுக்கும், அவர்களைப் பக்குவப்படுத்திய பயிற்சியாளர் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும் வவுனியா கல்விச் சமூகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement