• Nov 24 2024

ரஷ்யா, கூகுள் நிறுவனத்திற்கு 2.5 டெசில்லியன் டொலர் அபராதம்!

Tharmini / Nov 2nd 2024, 9:23 am
image

கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கியபோது, யூடியூப்பில் ரஷ்ய அரசு நடத்தி வந்த சனல்களுக்கு, கூகுளின் தாய் நிறுவனம் மற்றும் யூட்ரியூப்பின் தலைமை நிறுவனம் ஆல்பபெட் தடை விதித்தது. 

இந்தத் தடையை நீக்கக் கோரித் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2.5 டிரில்லியன் டிரில்லியன் டிரில்லியன் அமெரிக்க டொலர்களை ($2.5 டெசில்லியன்) அபராதமாக விதித்துள்ளது.

எண் வடிவில் அந்தத் தொகையை முழுமையாக எழுதிப் பார்த்தால் அந்தத் தொகை இவ்வாறு வரும்.    2,500,000,000,000,000,000,000,000,000,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இந்தத் தடை ஆரம்பித்த நாளில் இருந்து தற்போதுவரை அபராதத் தொகையை கூட்டி பார்க்கும்போது, அபராதத் தொகை டெசிலியனை எட்டியுள்ளது.

யூடியூப் சனல்களைத் தடை செய்வதன் மூலம் நாட்டின் நிர்வாகக் குற்றச் சட்டத்தை மீறியதற்காக ரஷ்யாவுக்கு கூகுள் 36 இலக்கத் தொகையை செலுத்த வேண்டும் என்று ரஷ்ய செய்தி நிறுவனமான Tass தெரிவித்துள்ளது.

உலகத்தில் உள்ள அத்தனை பணத்தைச் சேர்த்தாலும், இந்த அபராதத் தொகையை நெருங்கக் கூட முடியாது. 

கூகுள் நிறுவனம் ஒன்பது மாதங்களுக்குள் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், அதற்குப் பின்னர் ஒவ்வொரு நாளும் அந்தத் தொகை இரட்டிப்பாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்தும் வரை ரஷ்யாவுக்குள் கூகுள் பயன்பாடு தடை செய்யப்படும்.

தொழில்நுட்ப நிறுவனத்திற்கு எதிராக 17 யூடியூப் சனல்கள் கொண்டு வந்த உரிமைகோரல்களின் மதிப்பைக் கணக்கிட்டு இந்த அபராத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கான கோரிக்கைக்கு கூகுள் உடனடியாக பதிலளிக்கவில்லை.

ரஷ்ய அதிகாரிகளின் சந்தேகத்திற்குரிய தீர்ப்பை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஏற்க விரும்பினாலும் 2.24 டிரில்லியன் டொலர் சந்தை மதிப்பைக் கொண்ட கூகுளுக்கு அது அசத்தியமான ஒன்று.

இந் நிறுவனம் கடந்த ஆண்டு உலகளவில் 73.7 பில்லியன் டொலர் இலாபம் ஈட்டியுள்ளது.

இந்த அபராதம் உலகப் பொருளாதாரத்தின் முழு மதிப்பையும் குறைக்கிறது, இது சுமார் $105 டிரில்லியன் ஆகும்.

கூகிளுக்கு சொந்தமான யூடியூப், ரஷ்ய அரசு ஊடக சனல்களைத் தடுக்கத் தொடங்கிய 2020 ஆம் ஆண்டிலிருந்து மொஸ்கோவுடன் சட்டப் போராட்டங்கள் தொடங்குகின்றன.

2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, ஸ்புட்னிக் மற்றும் ஆர்டி உட்பட பல ரஷ்ய அரச சனல்களை யூடியூப் தடுத்தபோது நிலைமை தீவிரமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.



ரஷ்யா, கூகுள் நிறுவனத்திற்கு 2.5 டெசில்லியன் டொலர் அபராதம் கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கியபோது, யூடியூப்பில் ரஷ்ய அரசு நடத்தி வந்த சனல்களுக்கு, கூகுளின் தாய் நிறுவனம் மற்றும் யூட்ரியூப்பின் தலைமை நிறுவனம் ஆல்பபெட் தடை விதித்தது.  இந்தத் தடையை நீக்கக் கோரித் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2.5 டிரில்லியன் டிரில்லியன் டிரில்லியன் அமெரிக்க டொலர்களை ($2.5 டெசில்லியன்) அபராதமாக விதித்துள்ளது.எண் வடிவில் அந்தத் தொகையை முழுமையாக எழுதிப் பார்த்தால் அந்தத் தொகை இவ்வாறு வரும்.    2,500,000,000,000,000,000,000,000,000,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்.இந்தத் தடை ஆரம்பித்த நாளில் இருந்து தற்போதுவரை அபராதத் தொகையை கூட்டி பார்க்கும்போது, அபராதத் தொகை டெசிலியனை எட்டியுள்ளது. யூடியூப் சனல்களைத் தடை செய்வதன் மூலம் நாட்டின் நிர்வாகக் குற்றச் சட்டத்தை மீறியதற்காக ரஷ்யாவுக்கு கூகுள் 36 இலக்கத் தொகையை செலுத்த வேண்டும் என்று ரஷ்ய செய்தி நிறுவனமான Tass தெரிவித்துள்ளது.உலகத்தில் உள்ள அத்தனை பணத்தைச் சேர்த்தாலும், இந்த அபராதத் தொகையை நெருங்கக் கூட முடியாது.  கூகுள் நிறுவனம் ஒன்பது மாதங்களுக்குள் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், அதற்குப் பின்னர் ஒவ்வொரு நாளும் அந்தத் தொகை இரட்டிப்பாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.அபராதம் செலுத்தும் வரை ரஷ்யாவுக்குள் கூகுள் பயன்பாடு தடை செய்யப்படும்.தொழில்நுட்ப நிறுவனத்திற்கு எதிராக 17 யூடியூப் சனல்கள் கொண்டு வந்த உரிமைகோரல்களின் மதிப்பைக் கணக்கிட்டு இந்த அபராத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.கருத்துக்கான கோரிக்கைக்கு கூகுள் உடனடியாக பதிலளிக்கவில்லை.ரஷ்ய அதிகாரிகளின் சந்தேகத்திற்குரிய தீர்ப்பை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஏற்க விரும்பினாலும் 2.24 டிரில்லியன் டொலர் சந்தை மதிப்பைக் கொண்ட கூகுளுக்கு அது அசத்தியமான ஒன்று.இந் நிறுவனம் கடந்த ஆண்டு உலகளவில் 73.7 பில்லியன் டொலர் இலாபம் ஈட்டியுள்ளது.இந்த அபராதம் உலகப் பொருளாதாரத்தின் முழு மதிப்பையும் குறைக்கிறது, இது சுமார் $105 டிரில்லியன் ஆகும்.கூகிளுக்கு சொந்தமான யூடியூப், ரஷ்ய அரசு ஊடக சனல்களைத் தடுக்கத் தொடங்கிய 2020 ஆம் ஆண்டிலிருந்து மொஸ்கோவுடன் சட்டப் போராட்டங்கள் தொடங்குகின்றன.2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, ஸ்புட்னிக் மற்றும் ஆர்டி உட்பட பல ரஷ்ய அரச சனல்களை யூடியூப் தடுத்தபோது நிலைமை தீவிரமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement