• Apr 28 2024

ஈவு இரக்கமின்றி மருத்துவமனையை தாக்கிய ரஷ்யா..!தீய அரசு என வர்ணித்த உக்ரைன் அதிபர்..!samugammedia

Sharmi / May 28th 2023, 3:17 pm
image

Advertisement

உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யா தொடர்ந்தும்  உக்ரைன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்களான கிய்வ், டின்ப்ரோ போன்ற  நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த மே 25 ஆம் திகதி நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் டினிப்ரோ நகரின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்துள்ளது.

இந்த தாக்குதலில் டின்ப்ரோ நகரிலுள்ள ஒரு மருத்துவமனையும், அருகே இருந்த கால்நடை மருத்துவமனையும் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளது.

இவ்வாறாக மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் தீய அரசால் மட்டுமே மருத்துவமனைக்கு எதிராக போராட முடியும் என்று உக்கரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்உக்ரைன்  நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரத்தில் உள்ள மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ள அவர் ஒரு தீய  அரசால் மட்டுமே மருத்துவமனைக்கு எதிராக போராட முடியும் என்றும் இதில் இராணுவ நோக்கம் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

இது சுத்தமான பயங்கரவாதம் என்றும் ரஷ்யா தனது சொந்த விருப்பத்தை தீமையின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


ஈவு இரக்கமின்றி மருத்துவமனையை தாக்கிய ரஷ்யா.தீய அரசு என வர்ணித்த உக்ரைன் அதிபர்.samugammedia உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யா தொடர்ந்தும்  உக்ரைன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்களான கிய்வ், டின்ப்ரோ போன்ற  நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.இந்நிலையில் கடந்த மே 25 ஆம் திகதி நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் டினிப்ரோ நகரின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. இந்த தாக்குதலில் டின்ப்ரோ நகரிலுள்ள ஒரு மருத்துவமனையும், அருகே இருந்த கால்நடை மருத்துவமனையும் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளது.இவ்வாறாக மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் தீய அரசால் மட்டுமே மருத்துவமனைக்கு எதிராக போராட முடியும் என்று உக்கரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்உக்ரைன்  நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரத்தில் உள்ள மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி இருந்ததாக தெரிவித்துள்ளார்.அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ள அவர் ஒரு தீய  அரசால் மட்டுமே மருத்துவமனைக்கு எதிராக போராட முடியும் என்றும் இதில் இராணுவ நோக்கம் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார். இது சுத்தமான பயங்கரவாதம் என்றும் ரஷ்யா தனது சொந்த விருப்பத்தை தீமையின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement