புகழ்பெற்ற சிங்களப் பாடகி லதா வல்பொலவின் பிறந்தநாள் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்றார்.
பல தசாப்தங்களாக சிங்களப் பாடல் உலகில் ராணி என மகுடம் சூடிய புகழ்பெற்ற பாடகியான கலாசூரி திருமதி லதா வல்பொலவின் 92 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை அவரின் இல்லத்துக்குச் சென்று நலம் விசாரித்து, அவரோடிணைந்து பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்த நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, ரோஹன பண்டார, ஹெக்டர் அப்புஹாமி, ஜெ.சி.அலவதுவல, திலிப் வெதாராச்சி, எம். தர்மசேன, கீங்ஸ் நெல்சன், சித்ரால் பெர்னாண்டோ, பீ. ஆரியவங்ச ஆகியோருடன் பாடகர்கள், பாடகிகள் மற்றும் திருமதி லதா வல்பொலவின் குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
புகழ்பெற்ற சிங்களப் பாடகி லதாவின் பிறந்தநாள் நிகழ்வில் சஜித் பங்கேற்பு புகழ்பெற்ற சிங்களப் பாடகி லதா வல்பொலவின் பிறந்தநாள் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்றார்.பல தசாப்தங்களாக சிங்களப் பாடல் உலகில் ராணி என மகுடம் சூடிய புகழ்பெற்ற பாடகியான கலாசூரி திருமதி லதா வல்பொலவின் 92 ஆவது பிறந்தநாள் இன்றாகும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை அவரின் இல்லத்துக்குச் சென்று நலம் விசாரித்து, அவரோடிணைந்து பிறந்தநாளைக் கொண்டாடினார்.இந்த நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, ரோஹன பண்டார, ஹெக்டர் அப்புஹாமி, ஜெ.சி.அலவதுவல, திலிப் வெதாராச்சி, எம். தர்மசேன, கீங்ஸ் நெல்சன், சித்ரால் பெர்னாண்டோ, பீ. ஆரியவங்ச ஆகியோருடன் பாடகர்கள், பாடகிகள் மற்றும் திருமதி லதா வல்பொலவின் குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.