• Oct 28 2024

இனவாதிகளின் கருத்துக்களால் நாட்டுக்கு அவமானம் - சஜித்தின் கட்சி சாடல்! samugammedia

Tamil nila / Aug 19th 2023, 9:01 pm
image

Advertisement

"நாட்டில் தொடர்ந்தும் இனவாதம் கக்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்."

இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி.

அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார மேற்படிக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

 "நாட்டில் மீண்டும் இரத்தக் களரியை ஏற்படுத்தும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் தொடர்ந்தும் இனவாத, மதவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் இவ்வாறான கருத்துக்களால் நாடு அவமானத்தைச் சந்திக்கின்றது.

இந்த விடயத்தில் ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் நழுவல் போக்கில் செயற்படக்கூடாது. வெறும் கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் தெரிவிக்காமல் ரணில் அரசு செயலில் இறங்க வேண்டும். தொடர்ந்தும் இனவாதம் கக்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்." - என்றார்.

இனவாதிகளின் கருத்துக்களால் நாட்டுக்கு அவமானம் - சஜித்தின் கட்சி சாடல் samugammedia "நாட்டில் தொடர்ந்தும் இனவாதம் கக்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்."இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி.அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார மேற்படிக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், "நாட்டில் மீண்டும் இரத்தக் களரியை ஏற்படுத்தும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் தொடர்ந்தும் இனவாத, மதவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் இவ்வாறான கருத்துக்களால் நாடு அவமானத்தைச் சந்திக்கின்றது.இந்த விடயத்தில் ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் நழுவல் போக்கில் செயற்படக்கூடாது. வெறும் கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் தெரிவிக்காமல் ரணில் அரசு செயலில் இறங்க வேண்டும். தொடர்ந்தும் இனவாதம் கக்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement