• Nov 25 2024

சம்பளம் மற்றும் அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்படும்! - ஜனாதிபதி அறிவிப்பு

Chithra / Nov 21st 2024, 12:44 pm
image



இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் மக்களுக்கான பொறுப்பு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 

இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், நாம் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை தேர்தல் பிரசாரத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், இலங்கையில் மீண்டும் இனவாத அரசியலுக்கு எமது நாட்டில் இடமில்லை என்றும் எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை  என்றும் தெரிவித்தார். 

அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால், பாராளுமன்றத்தில் கூறப்படும் அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்லமுடியாது.

திறமையான பொதுச்சேவை, மக்களின் நல்வாழ்வுக்காகச் செயல்படும் பொதுச் சேவை இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக அரசு ஊழியர்களிடம் இருந்து எமக்கு பலமான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். அதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதம், கலாசாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்படக் கூடாது. அரசியல் மாற்றங்கள் வரலாம். சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. 

எனவே, அனைவருக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாத ஜனநாயக மற்றும் சுதந்திரமான அரசை உருவாக்குவது நமது பொறுப்பு. அதை நிறைவேற்றுவோம் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

சட்டம் அமுல்படுத்தப்படுகிறது என்ற உணர்வு மக்களிடம் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நாட்டில் நடந்தது சட்டத்தின் மீது மக்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது. 

சட்டம் ஒழுங்கு மீது சாமானிய மக்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. வலுப்படுத்தாமல் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த முடியாது, சட்டத்தின் மீதுள்ள மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள் அம்பலப்படுத்தப்படும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவார்கள் என்று நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம். 

மக்களால் வெறுக்கப்படும் பாராளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் பாராளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது.

பாராளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும். இந்த பாராளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்திபெற வேண்டும். ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துடன் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும். நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

'Clean Sri Lanka' கருத்திட்டத்துக்காக விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்படும். சிறந்த மாற்றத்துக்கு அரசியல் கட்டமைப்பு மாற்றமடைவதைப் போன்று, சமூக கட்டமைப்பும் மாற்றம் பெற வேண்டும்.

2024 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம், அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 மில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

5 வருடங்களுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது. என்றார். 

சம்பளம் மற்றும் அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் மக்களுக்கான பொறுப்பு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், நாம் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை தேர்தல் பிரசாரத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.மேலும், இலங்கையில் மீண்டும் இனவாத அரசியலுக்கு எமது நாட்டில் இடமில்லை என்றும் எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை  என்றும் தெரிவித்தார். அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால், பாராளுமன்றத்தில் கூறப்படும் அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்லமுடியாது.திறமையான பொதுச்சேவை, மக்களின் நல்வாழ்வுக்காகச் செயல்படும் பொதுச் சேவை இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக அரசு ஊழியர்களிடம் இருந்து எமக்கு பலமான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். அதில் கவனம் செலுத்தியுள்ளனர்.ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதம், கலாசாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்படக் கூடாது. அரசியல் மாற்றங்கள் வரலாம். சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. எனவே, அனைவருக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாத ஜனநாயக மற்றும் சுதந்திரமான அரசை உருவாக்குவது நமது பொறுப்பு. அதை நிறைவேற்றுவோம் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.சட்டம் அமுல்படுத்தப்படுகிறது என்ற உணர்வு மக்களிடம் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நாட்டில் நடந்தது சட்டத்தின் மீது மக்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது. சட்டம் ஒழுங்கு மீது சாமானிய மக்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. வலுப்படுத்தாமல் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த முடியாது, சட்டத்தின் மீதுள்ள மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள் அம்பலப்படுத்தப்படும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவார்கள் என்று நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம். மக்களால் வெறுக்கப்படும் பாராளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் பாராளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது.பாராளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும். இந்த பாராளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்திபெற வேண்டும். ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும்.சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துடன் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும். நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.'Clean Sri Lanka' கருத்திட்டத்துக்காக விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்படும். சிறந்த மாற்றத்துக்கு அரசியல் கட்டமைப்பு மாற்றமடைவதைப் போன்று, சமூக கட்டமைப்பும் மாற்றம் பெற வேண்டும்.2024 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம், அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 மில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.5 வருடங்களுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது. என்றார். 

Advertisement

Advertisement

Advertisement