• Nov 22 2024

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடு - ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட அறிவித்தல்

Chithra / Jul 23rd 2024, 12:41 pm
image


 

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகளை கோர ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், அனைத்து முன்மொழிவுகளின் மென் பிரதியை PDF வடிவில் saec@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09-08-2024 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்புமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேசிய குறைந்தபட்ச ஊதியத் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அதன்படி, தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியம் 17,500 ஆக உயரும்.

தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 700 ரூபாவாக அதிகரிப்பதற்கு 2016 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்தத்திற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடு - ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட அறிவித்தல்  அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகளை கோர ஆரம்பித்துள்ளது.இது தொடர்பான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும், அனைத்து முன்மொழிவுகளின் மென் பிரதியை PDF வடிவில் saec@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09-08-2024 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்புமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இதேவேளை, 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேசிய குறைந்தபட்ச ஊதியத் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.அதன்படி, தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியம் 17,500 ஆக உயரும்.தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 700 ரூபாவாக அதிகரிப்பதற்கு 2016 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்தத்திற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement