• Sep 22 2024

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு...! நாட்டுக்கு ஆபத்து என்கிறார் நாமல்...!samugammedia

Sharmi / Nov 2nd 2023, 10:54 am
image

Advertisement

தமது சம்பளங்களை உயர்த்துமாறு கோரி அரச ஊழியர்கள்  பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியதாலேயே பிரச்சினை ஏற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கின்றார். அதனால் வரவு செலவுத் திட்ட உள்ளடக்கங்களைப் பார்த்தே ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்போம் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.

வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின்னர் அதில் உள்ள விடயங்களைக் கருத்திற் கொண்டே முடிவு எடுக்கப்படும்.

அரசியல் நோக்கங்களுக்காக அன்றி, நாடு தொடர்பாகச் சிந்தித்தே தீர்மானம் எடுக்கப்படும்  எனவும் தெரிவித்தார்.

2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு. நாட்டுக்கு ஆபத்து என்கிறார் நாமல்.samugammedia தமது சம்பளங்களை உயர்த்துமாறு கோரி அரச ஊழியர்கள்  பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இது தொடர்பில் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,2015ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியதாலேயே பிரச்சினை ஏற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கின்றார். அதனால் வரவு செலவுத் திட்ட உள்ளடக்கங்களைப் பார்த்தே ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்போம் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின்னர் அதில் உள்ள விடயங்களைக் கருத்திற் கொண்டே முடிவு எடுக்கப்படும்.அரசியல் நோக்கங்களுக்காக அன்றி, நாடு தொடர்பாகச் சிந்தித்தே தீர்மானம் எடுக்கப்படும்  எனவும் தெரிவித்தார்.2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement