• May 19 2024

18 சதவீதமாக உயரும் வரி..! இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி..! samugammedia

VAT
Chithra / Nov 2nd 2023, 10:58 am
image

Advertisement

 

அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி விகிதங்களை 18 சதவீதமாக உயர்த்துவது பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை விதிப்பதன் மூலம் விலை மட்டங்களை அதிகரிப்பதன் மூலம் பணவீக்கத்தை அதிகரிக்க முடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரி அதிகரிப்பினால் நிச்சயமாக பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என அவர் அவர் சுட்டிக்காட்டியு்ள்ளார்.

அதிகரிக்கப்படும் வரி வாடிக்கையாளர்களிடமே அறவிடப்படும். இதனால் விநியோகஸ்தர்கள் அதிகளவில் விலைகளை அதிகரித்து தங்கள் பொருட்களை வழங்குவார்கள்.

இதனை அதிக விலைக்கு வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும்.

உதாரணமாக 100 ரூபாய்க்கு ஒரு பொருளை கொள்வனவு செய்திருந்தால் ஜனவரி மாதம் முதல் 103 ரூபாய்க்கும் அதிக கட்டணத்தை மக்கள் செலுத்த நேரிடும்.

பெறுமதி சேர்ப்புக்கான வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் இந்நாட்டின் வறிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் விலை அதிகரிப்பு காரணமாக உலக சந்தையில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் போட்டித்தன்மையும் பாதிக்கப்படும் என சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

18 சதவீதமாக உயரும் வரி. இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி. samugammedia  அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி விகிதங்களை 18 சதவீதமாக உயர்த்துவது பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை விதிப்பதன் மூலம் விலை மட்டங்களை அதிகரிப்பதன் மூலம் பணவீக்கத்தை அதிகரிக்க முடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.இந்த வரி அதிகரிப்பினால் நிச்சயமாக பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என அவர் அவர் சுட்டிக்காட்டியு்ள்ளார்.அதிகரிக்கப்படும் வரி வாடிக்கையாளர்களிடமே அறவிடப்படும். இதனால் விநியோகஸ்தர்கள் அதிகளவில் விலைகளை அதிகரித்து தங்கள் பொருட்களை வழங்குவார்கள்.இதனை அதிக விலைக்கு வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும்.உதாரணமாக 100 ரூபாய்க்கு ஒரு பொருளை கொள்வனவு செய்திருந்தால் ஜனவரி மாதம் முதல் 103 ரூபாய்க்கும் அதிக கட்டணத்தை மக்கள் செலுத்த நேரிடும்.பெறுமதி சேர்ப்புக்கான வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் இந்நாட்டின் வறிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.மேலும் விலை அதிகரிப்பு காரணமாக உலக சந்தையில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் போட்டித்தன்மையும் பாதிக்கப்படும் என சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement