• Jan 21 2025

ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் ஜேவிபி எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம்!

Chithra / Jan 21st 2025, 7:41 am
image

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ஒரே கணக்கில் வரவு வைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு பிரதி  அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது, 1994 ஆம் ஆண்டு முதல் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினரான நிஹால் கலப்பதி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கட்சியால் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடைமுறையை ஜனாதிபதியும் பின்பற்றுகிறார்.  

குறித்த நிதிகள் கொழும்பு பொரல்லையில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு,

பொது சேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிதியின் மூலம் மக்களுக்காக பணியாற்ற அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளன என அவர் கூறினார்.

ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் ஜேவிபி எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ஒரே கணக்கில் வரவு வைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு பிரதி  அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது, 1994 ஆம் ஆண்டு முதல் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினரான நிஹால் கலப்பதி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கட்சியால் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நடைமுறையை ஜனாதிபதியும் பின்பற்றுகிறார்.  குறித்த நிதிகள் கொழும்பு பொரல்லையில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு,பொது சேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.இந்த நிதியின் மூலம் மக்களுக்காக பணியாற்ற அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளன என அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement