சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர்தின நினைவு தினத்தை ஏற்பாடு செய்திருந்த நினைவுநாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 17 நபர்களுக்கு வியாழக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் அவர்கள் அனைவரையும் சம்பூர் பொலிஸார் இன்று சனிக்கிழமை மாலை சம்பூர் பொலிஸ் நிலையத்திற்கு பேசியிருந்தார்.
இதன்போது நீங்கள் யாரும் மாவீரர்தின நினைவுநாள் செயற்பாட்டில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று தெரிவித்ததாகவும் இதனடிப்படையில் இந்த தடையை நீக்குவதற்காக திங்கட்கிழமை திருகோணமலை உயர் நீதிமன்றை நாடவுள்ளதாகவும் சம்பூர் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.காண்டீபன் தெரிவித்தார்.
அதேவேளை பல மாவட்டங்களில் பிரச்சினைகள் இன்றி உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் சம்பூரில் மாத்திரம் தடையுத்தரவு பெறப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எது எவ்வாறு இருந்தபோதிலும் நீதிமன்ற நாடி உரிய தீர்வினை பெற்று கொள்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .
சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினருக்கு பொலிஸார் எச்சரிக்கை samugammedia சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர்தின நினைவு தினத்தை ஏற்பாடு செய்திருந்த நினைவுநாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 17 நபர்களுக்கு வியாழக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.இந்நிலையில் அவர்கள் அனைவரையும் சம்பூர் பொலிஸார் இன்று சனிக்கிழமை மாலை சம்பூர் பொலிஸ் நிலையத்திற்கு பேசியிருந்தார்.இதன்போது நீங்கள் யாரும் மாவீரர்தின நினைவுநாள் செயற்பாட்டில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று தெரிவித்ததாகவும் இதனடிப்படையில் இந்த தடையை நீக்குவதற்காக திங்கட்கிழமை திருகோணமலை உயர் நீதிமன்றை நாடவுள்ளதாகவும் சம்பூர் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.காண்டீபன் தெரிவித்தார்.அதேவேளை பல மாவட்டங்களில் பிரச்சினைகள் இன்றி உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் சம்பூரில் மாத்திரம் தடையுத்தரவு பெறப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.எது எவ்வாறு இருந்தபோதிலும் நீதிமன்ற நாடி உரிய தீர்வினை பெற்று கொள்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .