• Oct 11 2025

வரலாற்று சிறப்புமிக்க நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த திருவிழா..!

Aathira / Oct 11th 2025, 8:14 am
image

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவத்தின் பத்தாம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழா இன்று காலை 5:45 மணியளவில் நாகர்கோவில் இந்து சமுத்திரத்தில் இடம் பெற்றது.

முன்னதாக காலை 3:30 மணியளவில் பிரணவக்குருக்கள் தலைமையில் வசந்தமண்டப பூசைகள் இடம் பெற்று,  

4:30 மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்ட நாகதம்பிரான் 5:00 மணியளவில் சமுத்திரத்தை வந்தடைந்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள்  சூழ சமுத்திர தீர்தமாடல் இடம் பெற்றது.

ஆலயத்தின் பிற்பகல் இடம்பெறும் கேணித் தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

இரவிரவாக இடம் பெற்ற சிறப்பு பூசைகளில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், அம்பன் பிரதேச வைத்தியசாலை என்பன மருத்துவ சேவைகளை வழங்கியது.

பருத்தித்துறை பிரதேச சபை சுகாதார வசதிகளையும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நிர்வாக ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தனர். 

பாதுகாப்பு ஏற்பாடுகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டிருந்தனர். 

இன்றைய திருவிழாவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.


வரலாற்று சிறப்புமிக்க நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த திருவிழா. வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவத்தின் பத்தாம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழா இன்று காலை 5:45 மணியளவில் நாகர்கோவில் இந்து சமுத்திரத்தில் இடம் பெற்றது.முன்னதாக காலை 3:30 மணியளவில் பிரணவக்குருக்கள் தலைமையில் வசந்தமண்டப பூசைகள் இடம் பெற்று,  4:30 மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்ட நாகதம்பிரான் 5:00 மணியளவில் சமுத்திரத்தை வந்தடைந்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள்  சூழ சமுத்திர தீர்தமாடல் இடம் பெற்றது.ஆலயத்தின் பிற்பகல் இடம்பெறும் கேணித் தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.இரவிரவாக இடம் பெற்ற சிறப்பு பூசைகளில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், அம்பன் பிரதேச வைத்தியசாலை என்பன மருத்துவ சேவைகளை வழங்கியது.பருத்தித்துறை பிரதேச சபை சுகாதார வசதிகளையும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நிர்வாக ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டிருந்தனர். இன்றைய திருவிழாவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement