• May 09 2024

60 வருடங்கள் தூங்காமல் வாழ்ந்து வரும் முதியவரின் கதை samugammedia

Chithra / Jul 9th 2023, 2:15 pm
image

Advertisement

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 80 வயது முதியவர் 60 ஆண்டுகளாக தூங்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய் என்கோக் (Thai Ngoc) என்பவரே இவ்வாறு தூங்காமல் இருக்கின்றார். 

இவர் 1962-ம் ஆண்டிலிருந்து, சுமார் அறுபது வருடங்களாக தூங்காமல் வாழ்ந்து வருகிறார்.

சிறுவயதில் இவருக்கு காய்ச்சல் வந்தபோது தூங்க முடியாமல் தவித்திருக்கிறார். அன்றிலிருந்து இத்தனை ஆண்டுகளாக தூங்காமலேயே தனது வாழ்க்கையை ஓட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து என்கோக்கின் குடும்பத்தினர்கள், நண்பர்கள், வீட்டின் அருகே வசிப்பவர்கள் என பலரும் அவர் முதியவர் தூங்கி நாங்கள் பார்த்ததேயில்லை என கூறுகிறார்கள்.

இது எப்படி சாத்தியம் என என்கோக்கின் உடலை பல மருத்துவர்கள் சோதித்துப் பார்த்துவிட்டார்கள். இவர் ஒருநாளாவது தூங்கி இருப்பார் என அவர்களாலும் நிரூபிக்க முடியவில்லை. 

இவர் நிரந்தரமாக தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி மருத்துவர்களும் சென்று விட்டார்கள். ஒருநாள் தூங்காமல் இருந்தாலே நமக்கெல்லாம் பல பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.

இத்தனை ஆண்டுகளில் ஜாக்கிற்கு உடல்நலக் கோளாறு வந்ததே இல்லையா என்ன? இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இதுவரை ஒருநாள் கூட மருத்துவ சிகிச்சை எடுக்கும் அளவிற்கு எந்தவித நோயும் அவருக்கு ஏற்படவில்லை.

போரினால் ஏற்பட்ட மன அதிர்ச்சி காரணமாக இருவருக்கு இப்படி ஆகியிருக்கலாம் என ஒருசிலர் கூறுகின்றனர்.

இவருக்கு இருப்பது அரிதான நோய் என மற்றவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.


60 வருடங்கள் தூங்காமல் வாழ்ந்து வரும் முதியவரின் கதை samugammedia வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 80 வயது முதியவர் 60 ஆண்டுகளாக தூங்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தாய் என்கோக் (Thai Ngoc) என்பவரே இவ்வாறு தூங்காமல் இருக்கின்றார். இவர் 1962-ம் ஆண்டிலிருந்து, சுமார் அறுபது வருடங்களாக தூங்காமல் வாழ்ந்து வருகிறார்.சிறுவயதில் இவருக்கு காய்ச்சல் வந்தபோது தூங்க முடியாமல் தவித்திருக்கிறார். அன்றிலிருந்து இத்தனை ஆண்டுகளாக தூங்காமலேயே தனது வாழ்க்கையை ஓட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து என்கோக்கின் குடும்பத்தினர்கள், நண்பர்கள், வீட்டின் அருகே வசிப்பவர்கள் என பலரும் அவர் முதியவர் தூங்கி நாங்கள் பார்த்ததேயில்லை என கூறுகிறார்கள்.இது எப்படி சாத்தியம் என என்கோக்கின் உடலை பல மருத்துவர்கள் சோதித்துப் பார்த்துவிட்டார்கள். இவர் ஒருநாளாவது தூங்கி இருப்பார் என அவர்களாலும் நிரூபிக்க முடியவில்லை. இவர் நிரந்தரமாக தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி மருத்துவர்களும் சென்று விட்டார்கள். ஒருநாள் தூங்காமல் இருந்தாலே நமக்கெல்லாம் பல பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.இத்தனை ஆண்டுகளில் ஜாக்கிற்கு உடல்நலக் கோளாறு வந்ததே இல்லையா என்ன இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இதுவரை ஒருநாள் கூட மருத்துவ சிகிச்சை எடுக்கும் அளவிற்கு எந்தவித நோயும் அவருக்கு ஏற்படவில்லை.போரினால் ஏற்பட்ட மன அதிர்ச்சி காரணமாக இருவருக்கு இப்படி ஆகியிருக்கலாம் என ஒருசிலர் கூறுகின்றனர்.இவருக்கு இருப்பது அரிதான நோய் என மற்றவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement