மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
சனத் நிஷாந்தவின் பூதவுடல் பொது அஞ்சலிக்காக நேற்று (25) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், இன்று ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, வரும் 28-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளனர்.
மஹவ பிரதேசத்தில் வசிக்கும் அனுருத்த ஜயக்கொடி என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான இவர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையாற்றியுள்ளார்.
இவர், அமைச்சரின் ஆசனத்திற்குப் பின்னால் அமர்ந்துச்சென்றுள்ள நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் பயணித்த கண்டெய்னரில் மோதி பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
புத்தளத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ள சனத் நிஷாந்தவின் பூதவுடல். மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.சனத் நிஷாந்தவின் பூதவுடல் பொது அஞ்சலிக்காக நேற்று (25) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், இன்று ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, வரும் 28-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.நேற்று அதிகாலை கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளனர்.மஹவ பிரதேசத்தில் வசிக்கும் அனுருத்த ஜயக்கொடி என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.ஒரு பிள்ளையின் தந்தையான இவர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையாற்றியுள்ளார்.இவர், அமைச்சரின் ஆசனத்திற்குப் பின்னால் அமர்ந்துச்சென்றுள்ள நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் பயணித்த கண்டெய்னரில் மோதி பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.