ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று(02) இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதர் தனது எக்ஸ் பக்கத்தில்,
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம்' என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில்,
தூதர் ஜூலி சுங், இன்று எனது இல்லத்தில் உங்களுக்கு விருந்தளிப்பதில் மகிழ்ச்சி.
இலங்கையில் ஊழலை எவ்வாறு நசுக்க முடியும் என்பது பற்றிய நுண்ணறிவு மற்றும் யோசனைகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
ஊழலை ஒழித்தால் மட்டுமே நமது நாடான இலங்கை முன்னேற முடியும், மேலும் இந்த நோக்கத்தை அடைவதற்கு அமெரிக்காவுடனும் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கின்றேன்' என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகா- அமெரிக்க தூதர் கொழும்பில் திடீர் சந்திப்பு. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று(02) இடம்பெற்றது.குறித்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதர் தனது எக்ஸ் பக்கத்தில்,'பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்திப்பதில் மகிழ்ச்சி.ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம்' என குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில்,தூதர் ஜூலி சுங், இன்று எனது இல்லத்தில் உங்களுக்கு விருந்தளிப்பதில் மகிழ்ச்சி.இலங்கையில் ஊழலை எவ்வாறு நசுக்க முடியும் என்பது பற்றிய நுண்ணறிவு மற்றும் யோசனைகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.ஊழலை ஒழித்தால் மட்டுமே நமது நாடான இலங்கை முன்னேற முடியும், மேலும் இந்த நோக்கத்தை அடைவதற்கு அமெரிக்காவுடனும் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கின்றேன்' என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.