• Nov 13 2024

கணவரின் வழியிலேயே எனது அரசியல் பயணம்- தொடரும் என்கிறார் சசிகலா ரவிராஜ்!

Tamil nila / Nov 9th 2024, 7:56 am
image

"ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தை  நேர்த்தியாக முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கே உண்டு. எனவே, மக்கள் தங்கள் முழுமையான ஆதரவை சங்குச் சின்னத்துக்கு வழங்க வேண்டும்."

- இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ்த் தேசியத்தைச் சிதைப்பதற்குப் பலரும் இறக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். யார் வருகின்றார்கள், எதனைக் கூறுகின்றார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

எமது கூட்டணிதான் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான அனுபமானவர்களை ஒன்றிணைத்துப் பயணிக்கின்றது. எனவே, எமது  கூட்டணிக்கே எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஒற்றுமையை வெளிப்படுத்த ஒவ்வொரு வாக்குகளையும் மக்கள் எமது சங்குச் சின்னத்துக்கு வழங்க வேண்டும்.

எனது கணவரின் வழியில் எனது பயணம் தொடர எனது இலக்கமான 7 ஆம் இலக்கத்துக்கும் புள்ளடி இடுங்கள்." - என்றார்.

கணவரின் வழியிலேயே எனது அரசியல் பயணம்- தொடரும் என்கிறார் சசிகலா ரவிராஜ் "ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தை  நேர்த்தியாக முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கே உண்டு. எனவே, மக்கள் தங்கள் முழுமையான ஆதரவை சங்குச் சின்னத்துக்கு வழங்க வேண்டும்."- இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"தமிழ்த் தேசியத்தைச் சிதைப்பதற்குப் பலரும் இறக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். யார் வருகின்றார்கள், எதனைக் கூறுகின்றார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.எமது கூட்டணிதான் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான அனுபமானவர்களை ஒன்றிணைத்துப் பயணிக்கின்றது. எனவே, எமது  கூட்டணிக்கே எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.ஒற்றுமையை வெளிப்படுத்த ஒவ்வொரு வாக்குகளையும் மக்கள் எமது சங்குச் சின்னத்துக்கு வழங்க வேண்டும்.எனது கணவரின் வழியில் எனது பயணம் தொடர எனது இலக்கமான 7 ஆம் இலக்கத்துக்கும் புள்ளடி இடுங்கள்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement