• May 17 2024

விடுதலைப் புலிகளின் சயனட், இலக்கத்தகடு, மனித எச்சங்கள் மீட்பு!

Chithra / Dec 1st 2022, 8:23 am
image

Advertisement

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை பண்படுத்தும் போது கடந்த 20.11.22 அன்று மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையநேற்று தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி றொகான் தடையவியல் பொலிஸார் மற்றும் பொலிஸார் ஆகியோரால் தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது 3 வகையான மனித எச்சங்களின் மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மனித எச்சங்களுடன் துப்பாக்கி ரவைகள் மற்றும் உடைகள் என்பன காணப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் சயனட், இலக்கத்தகடு என்பனவும் இதன்போது குறித்த பகுதியில் இருந்து மீட்னப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித எச்சங்களை சட்டவைத்திய அதிகாரி மரபணு பரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பணித்துள்ளார். 


விடுதலைப் புலிகளின் சயனட், இலக்கத்தகடு, மனித எச்சங்கள் மீட்பு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை பண்படுத்தும் போது கடந்த 20.11.22 அன்று மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையநேற்று தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி றொகான் தடையவியல் பொலிஸார் மற்றும் பொலிஸார் ஆகியோரால் தோண்டப்பட்டுள்ளது.இதன்போது 3 வகையான மனித எச்சங்களின் மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.மனித எச்சங்களுடன் துப்பாக்கி ரவைகள் மற்றும் உடைகள் என்பன காணப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் சயனட், இலக்கத்தகடு என்பனவும் இதன்போது குறித்த பகுதியில் இருந்து மீட்னப்பட்டுள்ளன.மீட்கப்பட்ட மனித எச்சங்களை சட்டவைத்திய அதிகாரி மரபணு பரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பணித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement