• May 05 2025

கடல் பிராந்தியங்கள் காற்றுடன் கொந்தளிப்பான காணப்படும் - மக்களுக்கு வந்த எச்சரிக்கை

Chithra / Jan 31st 2025, 6:50 am
image

 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்த வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.  

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

இதேவேளை  தீங்கு விளைவிக்கும் காற்றின் தரம், படிப்படியாக குறைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அதிகார மத்திய சுற்றுச்சூழல் சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 150ஐத் தாண்டியிருந்தாலும், நாட்டின் மத்திய பகுதியில் பல இடங்களில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு தற்போது 50க்கும் கீழே குறைந்துள்ளது.

காற்றின் தரம் நேற்று, எந்த இடத்திலும் 150க்கு மேல் பதிவாகவில்லை என்றும், 

கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் வெப்பநிலை 100க்கு அருகில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், சுவாசப் பிரச்சினைகள் உள்ள உணர்திறன் மிக்க நபர்கள் ஏதேனும் அசௌகரியத்தை அனுபவித்தால் தகுந்த மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடல் பிராந்தியங்கள் காற்றுடன் கொந்தளிப்பான காணப்படும் - மக்களுக்கு வந்த எச்சரிக்கை  ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்த வானிலை எதிர்பார்க்கப்படலாம்.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.  ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.இதேவேளை  தீங்கு விளைவிக்கும் காற்றின் தரம், படிப்படியாக குறைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அதிகார மத்திய சுற்றுச்சூழல் சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 150ஐத் தாண்டியிருந்தாலும், நாட்டின் மத்திய பகுதியில் பல இடங்களில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு தற்போது 50க்கும் கீழே குறைந்துள்ளது.காற்றின் தரம் நேற்று, எந்த இடத்திலும் 150க்கு மேல் பதிவாகவில்லை என்றும், கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் வெப்பநிலை 100க்கு அருகில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இருப்பினும், சுவாசப் பிரச்சினைகள் உள்ள உணர்திறன் மிக்க நபர்கள் ஏதேனும் அசௌகரியத்தை அனுபவித்தால் தகுந்த மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now