• Sep 21 2024

யாழ், நாவந்துறையில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை திறந்து வைப்பு!

Tamil nila / Dec 29th 2022, 6:26 pm
image

Advertisement

யாழ்ப்பாணம், நாவந்துறை பகுதியில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. 



இன்று வியாழக்கிழமை  "சுகந் இன்ரநஷ்னல்" நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

 


யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் சுகந்தசீலன் அரவிந்தனின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த  நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



இந் நிகழ்வில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், கடற்படையினர் கலந்து கொண்டனர்.

யாழ், நாவந்துறையில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை திறந்து வைப்பு யாழ்ப்பாணம், நாவந்துறை பகுதியில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை  "சுகந் இன்ரநஷ்னல்" நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் சுகந்தசீலன் அரவிந்தனின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த  நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், கடற்படையினர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement