• May 19 2024

கல்முனையில் மின்சார பிரச்சினைகளைத் தீர்க்கும் நடமாடும் சேவை!

Sharmi / Dec 29th 2022, 6:16 pm
image

Advertisement

இலங்கை மக்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்படட்ட கிழக்கு மாகாணத்திற்கான மின்சார பாவனையாளர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மின்சார கணக்கின் பெயர் மற்றும் முகவரியை மாற்றுதல், மீற்றர், மின்கம்பங்களை மாற்றுதல், புதிய மின் இணைப்புக்களை வழங்குதல், மின் அளவீட்டு முறைமையை மாற்றுதல், மின் பட்டியல், மின் தடைகள் போன்ற பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் மின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் போன்ற இன்னோரன்ன பல சேவைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் றொசான் வீர சூரிய, கல்முனை மின்சார பிரதம பொறியியலாளர் ஏ. எம். ஹைக்கல், கிழக்கு மாகாண நுகர்வோர் ஆலோசனை குழு உறுப்பினர் ஏ.எம்.தமீம் ஆகியோருடன் இலங்கை பொதுப் பயன்பாடு ஆணை குழுவின் உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், மின்சார பிரச்சனை உள்ள நுகர்வோர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

இந்த நடமாடும் சேவையில் 80 பேருடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் மின்சார பிரச்சினைகளைத் தீர்க்கும் நடமாடும் சேவை இலங்கை மக்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்படட்ட கிழக்கு மாகாணத்திற்கான மின்சார பாவனையாளர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது, மின்சார கணக்கின் பெயர் மற்றும் முகவரியை மாற்றுதல், மீற்றர், மின்கம்பங்களை மாற்றுதல், புதிய மின் இணைப்புக்களை வழங்குதல், மின் அளவீட்டு முறைமையை மாற்றுதல், மின் பட்டியல், மின் தடைகள் போன்ற பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் மின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் போன்ற இன்னோரன்ன பல சேவைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் றொசான் வீர சூரிய, கல்முனை மின்சார பிரதம பொறியியலாளர் ஏ. எம். ஹைக்கல், கிழக்கு மாகாண நுகர்வோர் ஆலோசனை குழு உறுப்பினர் ஏ.எம்.தமீம் ஆகியோருடன் இலங்கை பொதுப் பயன்பாடு ஆணை குழுவின் உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், மின்சார பிரச்சனை உள்ள நுகர்வோர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.இந்த நடமாடும் சேவையில் 80 பேருடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement