• Oct 21 2024

கனமழையுடன் கடல் கொந்தளிப்பு - அடுத்த 24 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Oct 20th 2024, 8:28 am
image

Advertisement

 

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (20) காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய-கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நாளை (21) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பின்னர், இந்த அமைப்பு வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒக்டோபர் 23ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மிக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த கடற்பரப்புகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கனமழையுடன் கடல் கொந்தளிப்பு - அடுத்த 24 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை  கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (20) காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.மத்திய-கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நாளை (21) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பின்னர், இந்த அமைப்பு வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒக்டோபர் 23ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.மிக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த கடற்பரப்புகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement