திருகோணமலை -நவரெட்ணபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வயல் காணியொன்றின் மரத்தின் கீழ் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பூர் பொலிஸாரினால் பெக்கோ இயந்திரத்தைக் கொண்டு இன்று (14) அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் ரஜீவன் டெசீபா முன்னிலையில் இவ் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
விசேட அதிரடிப்படையினர் ,பொலிஸார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் உள்ளிட்ட பல பிரிவினரும் அகழ்வுப்பணி இடம்பெற்ற இடத்தில பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த அகழ்வுப் பணியில் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை எனவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பூரில் ஆயுதங்களை தேடி இன்று அகழ்வுப்பணி samugammedia திருகோணமலை -நவரெட்ணபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வயல் காணியொன்றின் மரத்தின் கீழ் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சம்பூர் பொலிஸாரினால் பெக்கோ இயந்திரத்தைக் கொண்டு இன்று (14) அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் ரஜீவன் டெசீபா முன்னிலையில் இவ் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.விசேட அதிரடிப்படையினர் ,பொலிஸார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் உள்ளிட்ட பல பிரிவினரும் அகழ்வுப்பணி இடம்பெற்ற இடத்தில பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும் குறித்த அகழ்வுப் பணியில் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை எனவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.