• May 02 2024

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஏற்படும் உடல் நல பிரச்சினைகள்! samugammedia

Tamil nila / Oct 14th 2023, 10:06 pm
image

Advertisement

நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். உடல் பருமனை குறைக்க வேண்டுமா தண்ணீரோடு திரவ உணவுகளை அதிகம் பருகுங்கள் என தண்ணீர் குடிப்பதற்காகச் சொல்லப்படும் அறிவுரைகள்.

`தண்ணீர் நல்லது' என்பது தான் காலகாலமாக நமக்குச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அதுவே பல்வேறு உடல்நல பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும்.

தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். சருமத்துக்கும் பொலிவு சேர்க்கும். அதனால் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்ற எண்ணத்தில் நம்மில் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதை கணக்கிடாமல் குறிப்பிட்ட இடைவெளியில் பருகிக்கொண்டே இருப்பார்கள்.

உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது சோடியம் அளவில் மாறுபாடு ஏற்படும். தேவையற்ற நீரை வெளியேற்ற உடல் கட்டமைப்பு சிரமப்படும். அதன் காரணமாக வாந்தி, தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

நமது உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும். தெளிவான வெள்ளை நிறத்தில் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி தெளிவான வெள்ளை நிறத்தில் வெளியேறுவது நீங்கள் அதிகபடியான தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்பட்சத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகுதை உறுதி செய்ய வேண்டும்.

தண்ணீர் அளவு

ஒவ்வொருவரின் உடலின் அமைப்புக்கு ஏற்ப தண்ணீரின் தேவை மாறுபடும். அதனை தெரிந்து கொண்டு தேவையான நீரை நாள்தோறும் அருந்த வேண்டும். தேவைக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்கும்போது இரத்த நாளங்களில் அதிகளவு தண்ணீர் சேரும். சோடியத்தின் அளவு குறைந்து உடலியல் மாற்றங்கள் ஏற்படும். சோடியத்தின் அளவில் மாற்றம் ஏற்படும்போது பிற சத்துகளின் அளவில் மாற்றத்தை உணரும் அதே வேளையில், உடல் உபாதைகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதிக தண்ணீர் பருகுதல்

தேவைக்கு அதிகமாக தண்ணீரை பருகுகிறீர்கள் என்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து கூறிவிடலாம். ஒரு சிலர் இரவு நேரத்தில் குறைந்தது ஏழு முறைக்கு மேல் சிறுநீர் செல்வார்கள். அவர்கள் உடலில் தண்ணீர் அதிகம் சேர்ந்திருக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். சிலருக்கும் உடல் எடையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். கைகள்,பாதங்கள், உதடு ஆகியவை வெளிறிக் காணப்படும்.

அதிக தண்ணீர் குடித்தால் ஏற்படும் பாதிப்புக்கள்

அதிக தண்ணீர் குடித்தால் ஒரு சிலருக்கு உடல் எடை கூடும். தசைகள் வலுவிழந்து காணப்படும். அதிகப்படியான தண்ணீர் குடித்தால் உங்கள் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட்டின் அளவு குறையத்துவங்கும். இதனால் தசை வலி ஏற்படும்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது கிட்னியின் வேலையும் அதிகரிக்கிறது. இதனால் கிட்னி தொடர்ந்து செயலாற்றிக் கொண்டேயிருப்பதால் உங்கள் உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்ககூடிய ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும்.

இதனால் எப்போதும் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

"நெஞ்சு சளி, தொடர் சளி இருப்பின் அதை தண்ணீரால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே நிறைய வெந்நீர் அவ்வபோது குடித்துக்கொண்டே இருப்பது நல்லது.”

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஏற்படும் உடல் நல பிரச்சினைகள் samugammedia நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். உடல் பருமனை குறைக்க வேண்டுமா தண்ணீரோடு திரவ உணவுகளை அதிகம் பருகுங்கள் என தண்ணீர் குடிப்பதற்காகச் சொல்லப்படும் அறிவுரைகள்.`தண்ணீர் நல்லது' என்பது தான் காலகாலமாக நமக்குச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அதுவே பல்வேறு உடல்நல பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும்.தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். சருமத்துக்கும் பொலிவு சேர்க்கும். அதனால் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்ற எண்ணத்தில் நம்மில் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதை கணக்கிடாமல் குறிப்பிட்ட இடைவெளியில் பருகிக்கொண்டே இருப்பார்கள்.உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது சோடியம் அளவில் மாறுபாடு ஏற்படும். தேவையற்ற நீரை வெளியேற்ற உடல் கட்டமைப்பு சிரமப்படும். அதன் காரணமாக வாந்தி, தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.நமது உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும். தெளிவான வெள்ளை நிறத்தில் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி தெளிவான வெள்ளை நிறத்தில் வெளியேறுவது நீங்கள் அதிகபடியான தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்பட்சத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகுதை உறுதி செய்ய வேண்டும்.தண்ணீர் அளவுஒவ்வொருவரின் உடலின் அமைப்புக்கு ஏற்ப தண்ணீரின் தேவை மாறுபடும். அதனை தெரிந்து கொண்டு தேவையான நீரை நாள்தோறும் அருந்த வேண்டும். தேவைக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்கும்போது இரத்த நாளங்களில் அதிகளவு தண்ணீர் சேரும். சோடியத்தின் அளவு குறைந்து உடலியல் மாற்றங்கள் ஏற்படும். சோடியத்தின் அளவில் மாற்றம் ஏற்படும்போது பிற சத்துகளின் அளவில் மாற்றத்தை உணரும் அதே வேளையில், உடல் உபாதைகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.அதிக தண்ணீர் பருகுதல்தேவைக்கு அதிகமாக தண்ணீரை பருகுகிறீர்கள் என்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து கூறிவிடலாம். ஒரு சிலர் இரவு நேரத்தில் குறைந்தது ஏழு முறைக்கு மேல் சிறுநீர் செல்வார்கள். அவர்கள் உடலில் தண்ணீர் அதிகம் சேர்ந்திருக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். சிலருக்கும் உடல் எடையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். கைகள்,பாதங்கள், உதடு ஆகியவை வெளிறிக் காணப்படும்.அதிக தண்ணீர் குடித்தால் ஏற்படும் பாதிப்புக்கள்அதிக தண்ணீர் குடித்தால் ஒரு சிலருக்கு உடல் எடை கூடும். தசைகள் வலுவிழந்து காணப்படும். அதிகப்படியான தண்ணீர் குடித்தால் உங்கள் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட்டின் அளவு குறையத்துவங்கும். இதனால் தசை வலி ஏற்படும்.அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது கிட்னியின் வேலையும் அதிகரிக்கிறது. இதனால் கிட்னி தொடர்ந்து செயலாற்றிக் கொண்டேயிருப்பதால் உங்கள் உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்ககூடிய ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும்.இதனால் எப்போதும் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்."நெஞ்சு சளி, தொடர் சளி இருப்பின் அதை தண்ணீரால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே நிறைய வெந்நீர் அவ்வபோது குடித்துக்கொண்டே இருப்பது நல்லது.”

Advertisement

Advertisement

Advertisement