• Apr 04 2025

தெற்கு சீனாவில் திடீரென சரிந்து விழுந்த சாலை : 24 பேர் பலி!

Tamil nila / May 1st 2024, 6:39 pm
image

தெற்கு சீனாவில் சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவாங்டாங் மாகாணத்தில் மீஜோ நகரில் 60 அடி நீளமுள்ள சாலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

சரிவுக்கான காரணத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாலை இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் குறித்த சாலையில் பயணித்த 20 கார்கள் சரிந்து விழுந்ததாகவும், 24 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்

தெற்கு சீனாவில் திடீரென சரிந்து விழுந்த சாலை : 24 பேர் பலி தெற்கு சீனாவில் சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குவாங்டாங் மாகாணத்தில் மீஜோ நகரில் 60 அடி நீளமுள்ள சாலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.சரிவுக்கான காரணத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாலை இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.இதில் குறித்த சாலையில் பயணித்த 20 கார்கள் சரிந்து விழுந்ததாகவும், 24 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement