• Nov 28 2024

பிரான்ஸில் பரபரப்பாகும் தேர்தல் – இன்றைய தினம் இரண்டாம் வாக்களிப்பு!

Tamil nila / Jul 7th 2024, 7:43 am
image

பிரான்ஸில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட தேர்தல் இடம்பெற உள்ளது.

இந்த நிலையில், மாற்று வாக்காளர்களின் எண்ணிக்கை முன்னர் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

3.2 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களுக்கான மாற்று வாக்காளர்களை பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அல்லது வேலை நிமிர்த்தம் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களுக்கு மாற்றாக, பிறிதொருவரை வாக்களிக்க அனுமதிப்பதே இந்த நடைமுறையாகும்.

கடந்தவாரம் இடம்பெற்ற முதலாம் கட்ட வாக்குப்பதிவின் போது 2.6 மில்லியன் பேர் தங்களுக்கான பிறிதொருவரை வாக்காளரை அறிவித்திருந்தார்கள்.

இந்த எண்ணிக்கையே கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸில் பரபரப்பாகும் தேர்தல் – இன்றைய தினம் இரண்டாம் வாக்களிப்பு பிரான்ஸில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட தேர்தல் இடம்பெற உள்ளது.இந்த நிலையில், மாற்று வாக்காளர்களின் எண்ணிக்கை முன்னர் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.3.2 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களுக்கான மாற்று வாக்காளர்களை பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அல்லது வேலை நிமிர்த்தம் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களுக்கு மாற்றாக, பிறிதொருவரை வாக்களிக்க அனுமதிப்பதே இந்த நடைமுறையாகும்.கடந்தவாரம் இடம்பெற்ற முதலாம் கட்ட வாக்குப்பதிவின் போது 2.6 மில்லியன் பேர் தங்களுக்கான பிறிதொருவரை வாக்காளரை அறிவித்திருந்தார்கள்.இந்த எண்ணிக்கையே கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement