• Nov 25 2024

தமிழ் அரசுக்கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான தெரிவு...! கிழக்கு மாகாணத்திற்கு சிறீதரன் திடீர் விஜயம்...!samugammedia

Sharmi / Jan 8th 2024, 10:16 am
image

தமிழ் அரசுக்கட்சியின் புதிய தலைமைத்துவதற்கான தெரிவு விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் தலைமைத்துவத்திற்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கிழக்கு மாகாணத்தின் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களையும் உறுப்பினர்களையும் சந்தித்து வருகின்றனர்.

கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களாக வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன் மற்றும் எம்.சுமந்திரன் கிழக்கு மாகாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.யோகேஸ்வரன் உள்ளிட்டோர் களத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்,  கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின்போது தமிழ் அரசுக்கட்சியின் அம்பாறை மாவட்டம் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியின் கிளைத் தலைவர்கள் முக்கியஸ்தர்கள், அங்கத்தவர்களையும் நேற்றிரவு (07) சந்தித்து உரையாடினார்.

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனின் தலைமையில் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் பல்வேறு கருத்துக்களையும் அவர் முன்வைத்ததுடன் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இதன்போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையராசன் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் அரியநேந்திரன் க.யோகேஸ்வரன் உள்ளிட்ட பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் அரசியல் உயர் பீட உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தனது வருகையின் நோக்கம் பற்றி தெளிவு படுத்தியதுடன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

குறிப்பாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் தரமுயர்வு ? மற்றும் தேர்தலில் தற்செயலாக தோல்வியடைந்தால் கட்சியுடனான அவரது பயணம் ? தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் கட்சிகளின் செல்வாக்கு குறைவடைந்துள்ள நிலையில் கட்சியின் தலைமைத்துவம் கிடைத்தால் அவரது எதிர்கால செயற்பாடு ?  வரலாற்றில் இல்லாதவாறு தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவதற்திற்காக போட்டி நிலை உருவாகியுள்ள இச்சந்தர்ப்பம் கட்சியின் பிளவுக்கு வழிகோலுமா? தமிழரசு கட்சியின் மீது நம்பிக்கை இழந்துள்ள புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் செயற்பாடுகள் ? போன்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

தமிழ் அரசுக்கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான தெரிவு. கிழக்கு மாகாணத்திற்கு சிறீதரன் திடீர் விஜயம்.samugammedia தமிழ் அரசுக்கட்சியின் புதிய தலைமைத்துவதற்கான தெரிவு விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் தலைமைத்துவத்திற்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கிழக்கு மாகாணத்தின் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களையும் உறுப்பினர்களையும் சந்தித்து வருகின்றனர்.கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களாக வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன் மற்றும் எம்.சுமந்திரன் கிழக்கு மாகாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.யோகேஸ்வரன் உள்ளிட்டோர் களத்தில் குதித்துள்ளனர்.இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்,  கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின்போது தமிழ் அரசுக்கட்சியின் அம்பாறை மாவட்டம் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியின் கிளைத் தலைவர்கள் முக்கியஸ்தர்கள், அங்கத்தவர்களையும் நேற்றிரவு (07) சந்தித்து உரையாடினார்.அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனின் தலைமையில் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் பல்வேறு கருத்துக்களையும் அவர் முன்வைத்ததுடன் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.இதன்போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையராசன் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் அரியநேந்திரன் க.யோகேஸ்வரன் உள்ளிட்ட பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் அரசியல் உயர் பீட உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.கலந்துரையாடலின் பின்னர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தனது வருகையின் நோக்கம் பற்றி தெளிவு படுத்தியதுடன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.குறிப்பாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் தரமுயர்வு மற்றும் தேர்தலில் தற்செயலாக தோல்வியடைந்தால் கட்சியுடனான அவரது பயணம் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் கட்சிகளின் செல்வாக்கு குறைவடைந்துள்ள நிலையில் கட்சியின் தலைமைத்துவம் கிடைத்தால் அவரது எதிர்கால செயற்பாடு   வரலாற்றில் இல்லாதவாறு தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவதற்திற்காக போட்டி நிலை உருவாகியுள்ள இச்சந்தர்ப்பம் கட்சியின் பிளவுக்கு வழிகோலுமா தமிழரசு கட்சியின் மீது நம்பிக்கை இழந்துள்ள புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் செயற்பாடுகள் போன்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement