உலக தமிழர் பேரவை இமாலய பிரகடனம் என்ற பெயரில் அண்மையில் மகிந்தவை சந்தித்து புகைப்படமும் வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் அவரது தம்பி கோத்தபாயவை "போர்குற்றங்கள் உடன் தொடர்புடையவர் என்றபடியால் சந்திக்க மாட்டோம்" என்று உலக தமிழர் பேரவை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளருக்கு தெரிவித்து இருந்தார்கள்.
இது தொடர்பான வரலாற்று உண்மைகளை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.
இஸ்ரேலுக்கு இணையான மகிந்த
இன்று காசாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கு தேவையான உணவையும் மருந்தையும் அனுப்பாத நிலையில் உலக நாடுகள் அதை இன அழிப்பாக கருதி தமது கண்டனங்களை வெளியிட்டு வருவதுடன் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது.
இதை ஒத்த ஒரு நிலையில் தான் 2009 ம் ஆண்டு மகிந்த தலைமையில் ஆன அரசாங்கம் வன்னியில் 70000 மக்களே இருக்கிறார்கள் என்று பொய் கூறி குறைந்த அளவு உணவையும் மருந்துகளையும் தடைக்கு உள்ளாகியிருந்த தமிழருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்க்கும் போது 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வன்னியில் இருந்தார்கள் என்பது பின்னர் நிரூபணமான நிலையில் வன்னியில் பல குழந்தைகளும் அப்பாவி பொது மக்களும் உணவு பஞ்சத்தாலும் கடுமையான மந்த போசணையாலும் பாதிக்கப்பட்டு நோய்க்கு மருந்து இல்லாமல் இறந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
இந்த விவரங்களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட சாட்சியத்தில் நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.
இவ்வாறு தமிழர் மீதான இறுதிப் போரை ஜனாதிபதி மகிந்த அவருடைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அதை ஊடகத்தில் நியாயப்படுத்திய கெஹெலிய ஆகிய அனைவரும் இணைந்தே செய்திருந்தார்கள்.
இவற்றை எல்லாம் விவரமாக அறிந்திருந்த உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் அண்ணன் மகிந்தாவை சந்தித்துவிட்டு "போர் குற்றம் புரிந்த தம்பி கோத்தபாயவை சந்திக்க மாட்டோம்" என்று கூறுவது 2024 இன் மிகப் பெரிய நகைச்சுவை ஆகவும் தமிழ் மக்களின் தலையில் மிளகாயை அரைப்பதாகவும் உள்ளது.
இமாலய பிரகடனம் ஒரு இமாலய தவறு
முதன் முதலில் தயாரிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டமான 1957 ம் ஆண்டு செல்வா பண்டா ஒப்பந்தத்துக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எதிர்த்த காலத்தில் இருந்து தமிழர்களினால் முன்வைக்கப்படும் தீர்வு திட்டங்களுக்கு தமிழர்களின் ஒற்றுமை இன்மையும் ஒரே குரலில் கோரிக்கைகளை முன்வைக்க தவறுவதும் தமிழ் தரப்பின் முக்கிய பலவீனமாக தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது.
ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்த பின்பு இந்தியாவும் சர்வதேசமும் தனிநாட்டு ஈழத்துக்கு ஆதரவளிக்க தவறியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக தமிழரின் உரிமைகளை பெறுவதற்கு சமஷ்டி தீர்வே ஒரே வழியாக உள்ளது.
யதார்த்தத்தை புரிந்து கொண்டவரும் தமிழ் மக்களின் அதிக வாக்குகளை பெற்றுக் கொண்ட கட்சியின் முதுபெரும் தலைவருமான திரு சம்பந்தரும் அதையே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
உண்மையில் தாய் நாட்டில் வாழும் தமிழருக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்க உலக தமிழர் பேரவை விரும்பி இருந்தால் சம்பந்தர் முதலான இலங்கை வாழ் தமிழ் தலைவர்களுடன் பேசி அவர்கள் கோரும் தீர்வு திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு சாம பேத தான தண்ட வழிகளை பிரயோகித்து அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
உண்மையில் பௌத்த தேரர்கள் புத்தர் காட்டிய அகிம்சை வழியில் ஏனைய இனத்தவர்களை சமனாக நடத்தியிருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பிரயோசனமாக இருந்திருக்கும்.
ஆனால் தேரவாத பௌத்தம் இலங்கையில் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து இலங்கை சிங்களவர்களுக்குரிய பௌத்த நாடு என்ற மகாவம்ச கோட்பாடுகளை வலியுறுத்தி வந்துள்ளதுடன் விஜயன் கதை மற்றும் துட்டகைமுனு காலத்தில் இருந்தே சிங்களவர்களை முதன்மைக் குடிகளாகவும் தமிழர்களை வந்தேறு குடிகளாகவும் அடையாளப்படுத்தி வந்துள்ளனர்.
இலங்கையின் அரசியலமைப்பில் 9ம் பிரிவு மூலம் பௌத்த சமயம் இலங்கையின் முதன்மை சமயமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் புத்த சாசன அமைச்சு நிறுவப்பட்டு பௌத்த மதத்தை பாதுகாப்பது என்ற பெயரில் பல மில்லியன்கள் மஹாநாயக்கர்களுக்கும் ஏனைய பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கும்
செலவிடப்படுவதோடு தமிழர் வாழும் பகுதிகளில் புதிய விகாரைகள் தொடர்ச்சியாக நிறுவப்பட்டு வருகின்றன.
2023 பாதீட்டில் மாத்திரம் 7940 மில்லியன்கள் புத்த சாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டதோடு அதன் மூலம் வாகனங்கள் உட்பட பல வசதிகளை தேரர்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறார்கள். காலங்காலமாக மன்னர்கள் காலத்தில் இருந்து சிங்கள தலைவர்கள் பௌத்தர்களின் ஆதரவை பெறுவதற்காக பல வசதிகளை தேரர்களுக்கு அளித்து வந்துள்ளனர்.
2024 பாதீட்டில் இதே சூழ்ச்சியின் ஒரு வடிவமாக அடுத்த தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி ரணில், புத்தரினால் மொழியப்பட்ட சம்ஜிவிக்காத முறைப்படி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் ஏற்கெனவே 2023 இல் ஒதுக்கப்பட்டதை விட இம்முறை பௌத்த பல்கலைக்கழகம் நூதனசாலை நூல் நிலையம் உட்பட பல புதிய நிர்மாணங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அதேவேளை தமிழர் வாழும் பிரதேசங்களில் -குருந்தூர் மலையில் இருந்து நாவற்குழி உட்பட பல இடங்களில்- விகாரைகள் நிறுவப்பட்டு விரிவு படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு சொல்லொன்று செயல் வேறு ஒன்றாக செயல்படும் பௌத்த தேரர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் உடன் ஏனைய மதத்தினரையும் இனத்தவரையும் சமனாக நடத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்துவது விவேகமான ஒரு செயலா? என்ற கேள்வி எழுகின்றது.
ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாக பீற்றிக்கொண்டிருக்கும் இமாலய பிரகடனத்தில் பின்வரும் விடயங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன:
1. பன்மைத்துவத்தை ஊக்குவித்தல்
2. பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான பொருத்தமான வளர்ச்சி மாதிரியைத் தேர்ந்தெடுப்பது
3. போதுமான அதிகாரப் பகிர்வை வழங்கும் புதிய அரசியலமைப்பு மற்றும் அது உருவாகும் வரை தற்போதைய அரசியலமைப்பின் விதிகளை "விசுவாசமாக" செயல்படுத்துதல்
4. ஒன்றுபட்ட மற்றும் பிரிக்கப்படாத நாட்டில் அதிகாரங்களைப் பகிர்தல்
5. இறுதிவரை சமரசம் செய்து கொண்ட இலங்கையை நோக்கிய எதிர்காலப் பார்வை
6. சர்வதேச மற்றும் இருதரப்பு கடமைகளுக்கு இணங்குதல், நாடு செழிப்பான நாடுகளுக்கு மத்தியில் பெருமைப்படுவதை உறுதிப்படுத்துகிறது.
இந்த 6 விடயங்களுள் குற்றங்களுக்கு பொறுப்பு கூறுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும் வழங்கும் விடயங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.
ஈழத்தில் கொல்லப்பட்ட எனது தந்தை உட்பட பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்களுக்கு எந்தவித நியாயத்தையோ அல்லது நிவாரணத்தையோ அல்லது தமிழருக்கு தற்போதுள்ள ஒரே நம்பிக்கையான சமஷ்டி தீர்வு பற்றி எதுவுமே இமாலய பிரகடனத்தில் கூறப்படவில்லை.
பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதியும் நிவாரணமும் வழங்காத எந்த தீர்வு திட்டமும் ஈழத்தில் எடுபடாது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என்ற அடிப்படை உண்மையை உலக தமிழர் பேரவை மறந்துவிட்டது.
இனப்படுகொலையின் சூத்திரதாரிகளாக உலக தமிழர்களினால் குற்றம் சாட்டப்படும் மகிந்த, கோத்தபாய மற்றும் கெஹெலிய அவர்களின் கர்மவினை காரணமாக பல மோசடிகளில் ஈடுபட்டு இன்று சிங்களவர்களினாலும் வெறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பதவியில் இருந்த கோத்தபாய சிங்களவர்களினாலேயே பதவியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார். கெஹெலிய புதுவருட தினத்தன்று வெறுப்புக்கு உள்ளான சிங்களவர்களினால் மரண வீட்டு மலர்வளையம் வைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
இவ்வாறு தாம் செய்த குற்றங்களுக்கான கர்மவினையை ராஜபக்சர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது எந்த வித பயனுமற்ற இமாலய பிரகடனம் என்ற ஒரு அர்த்தமில்லாத அறிக்கையை வெளியிடுவதற்காக உலக தமிழர் பேரவையினர் மகிந்தவை சந்தித்த நிகழ்வால் தாயகத்திலும் புலத்திலும் வசிக்கும் தமிழ் உணர்வாளர்கள் பெரும் வெறுப்படைந்து உள்ளனர்.
ஒருபுறம் கருப்பு ஜூலை, மாவீரர் தினம் என்று புலத்தை உசுப்பேத்தி கொண்டு மறுபுறம் தமிழருக்கு மாபெரும் அநீதியை இழைத்தவர்கள் உடன் கூடி குலவுகின்றனரா என்று கொதிப்பு அடைந்து உள்ளனர்.
உண்மையில் இமாலய பிரகடனம் ஜனாதிபதி ரணிலுக்கு சமஷ்டி தீர்வை பற்றி பேசாமல் புதிய அரசியலமைப்பு, மீண்டும் தமிழ் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கால தாமதத்தை ஏற்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஜனாதிபதி ரணிலுக்கு தேவையான அவகாசத்தை வழங்கியும், இன்னொரு தடவை தமிழ் மக்களின் வாக்குகளை ஏமாற்றி பெற்றுக் கொள்ளும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களுக்கு தேவையான நல்லிணக்கமும் தீர்வும்
8,12,2010 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கீழ்வரும் 3 முக்கிய விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்திருந்தேன். (ஆவணத்துக்கான இணைய இணைப்பு கீழ் தரப்பட்டுள்ளது. https://llrclk.files.wordpress.com/2011/02/submission-murali-vallipuranathan.pdf )
1. போரினாலும் இனக்கலவரத்தாலும் கொல்லப்பட்ட பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை நேர்மையாக ஏற்றுக் கொண்டு உரிய நிவாரணத்தை வழங்குதல்
2. கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை ஏற்றுக் கொண்டு தடுப்புக்காவலில் வைத்து கொல்லப்பட்டவர்களை வெளிப்படுத்தி காணாமல் போனவர்களுக்கு முடிவு கட்டுதல்
3. தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை பாதுகாக்கும் அரசியல் தீர்வை வழங்குதல்.
இன்றைய சூழலில் அந்த அரசியல் தீர்வு சமஷ்டி தீர்வாகும். இந்த 3 விடயங்களையும் விடுத்து பம்மாத்துக் கதைகள் பேசி "நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறோம், மகா சங்கத்தின் ஆதரவுடன் வரலாற்றில் புதிய மாற்றம் கொண்டு வந்திருக்கிறோம்" என்று கூறிக்கொண்டு மீண்டும் ஒரு தடவை சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கி ஏமாந்து நிற்கும் தமிழ் தலைமைகளையும் அவர்களது பயனற்ற பிரகடனத்தையும், முற்றாக நிராகரிப்போம்.
நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
ராஜபக்ச அண்ணன் நல்லவன், தம்பி கெட்டவன்: உலக தமிழர் பேரவையின் சமீபத்திய நகைச்சுவை உலக தமிழர் பேரவை இமாலய பிரகடனம் என்ற பெயரில் அண்மையில் மகிந்தவை சந்தித்து புகைப்படமும் வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் அவரது தம்பி கோத்தபாயவை "போர்குற்றங்கள் உடன் தொடர்புடையவர் என்றபடியால் சந்திக்க மாட்டோம்" என்று உலக தமிழர் பேரவை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளருக்கு தெரிவித்து இருந்தார்கள். இது தொடர்பான வரலாற்று உண்மைகளை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும். இஸ்ரேலுக்கு இணையான மகிந்த இன்று காசாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கு தேவையான உணவையும் மருந்தையும் அனுப்பாத நிலையில் உலக நாடுகள் அதை இன அழிப்பாக கருதி தமது கண்டனங்களை வெளியிட்டு வருவதுடன் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. இதை ஒத்த ஒரு நிலையில் தான் 2009 ம் ஆண்டு மகிந்த தலைமையில் ஆன அரசாங்கம் வன்னியில் 70000 மக்களே இருக்கிறார்கள் என்று பொய் கூறி குறைந்த அளவு உணவையும் மருந்துகளையும் தடைக்கு உள்ளாகியிருந்த தமிழருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்க்கும் போது 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வன்னியில் இருந்தார்கள் என்பது பின்னர் நிரூபணமான நிலையில் வன்னியில் பல குழந்தைகளும் அப்பாவி பொது மக்களும் உணவு பஞ்சத்தாலும் கடுமையான மந்த போசணையாலும் பாதிக்கப்பட்டு நோய்க்கு மருந்து இல்லாமல் இறந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இந்த விவரங்களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட சாட்சியத்தில் நான் குறிப்பிட்டு இருக்கிறேன். இவ்வாறு தமிழர் மீதான இறுதிப் போரை ஜனாதிபதி மகிந்த அவருடைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அதை ஊடகத்தில் நியாயப்படுத்திய கெஹெலிய ஆகிய அனைவரும் இணைந்தே செய்திருந்தார்கள். இவற்றை எல்லாம் விவரமாக அறிந்திருந்த உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் அண்ணன் மகிந்தாவை சந்தித்துவிட்டு "போர் குற்றம் புரிந்த தம்பி கோத்தபாயவை சந்திக்க மாட்டோம்" என்று கூறுவது 2024 இன் மிகப் பெரிய நகைச்சுவை ஆகவும் தமிழ் மக்களின் தலையில் மிளகாயை அரைப்பதாகவும் உள்ளது. இமாலய பிரகடனம் ஒரு இமாலய தவறு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டமான 1957 ம் ஆண்டு செல்வா பண்டா ஒப்பந்தத்துக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எதிர்த்த காலத்தில் இருந்து தமிழர்களினால் முன்வைக்கப்படும் தீர்வு திட்டங்களுக்கு தமிழர்களின் ஒற்றுமை இன்மையும் ஒரே குரலில் கோரிக்கைகளை முன்வைக்க தவறுவதும் தமிழ் தரப்பின் முக்கிய பலவீனமாக தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்த பின்பு இந்தியாவும் சர்வதேசமும் தனிநாட்டு ஈழத்துக்கு ஆதரவளிக்க தவறியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக தமிழரின் உரிமைகளை பெறுவதற்கு சமஷ்டி தீர்வே ஒரே வழியாக உள்ளது. யதார்த்தத்தை புரிந்து கொண்டவரும் தமிழ் மக்களின் அதிக வாக்குகளை பெற்றுக் கொண்ட கட்சியின் முதுபெரும் தலைவருமான திரு சம்பந்தரும் அதையே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். உண்மையில் தாய் நாட்டில் வாழும் தமிழருக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்க உலக தமிழர் பேரவை விரும்பி இருந்தால் சம்பந்தர் முதலான இலங்கை வாழ் தமிழ் தலைவர்களுடன் பேசி அவர்கள் கோரும் தீர்வு திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு சாம பேத தான தண்ட வழிகளை பிரயோகித்து அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். உண்மையில் பௌத்த தேரர்கள் புத்தர் காட்டிய அகிம்சை வழியில் ஏனைய இனத்தவர்களை சமனாக நடத்தியிருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பிரயோசனமாக இருந்திருக்கும். ஆனால் தேரவாத பௌத்தம் இலங்கையில் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து இலங்கை சிங்களவர்களுக்குரிய பௌத்த நாடு என்ற மகாவம்ச கோட்பாடுகளை வலியுறுத்தி வந்துள்ளதுடன் விஜயன் கதை மற்றும் துட்டகைமுனு காலத்தில் இருந்தே சிங்களவர்களை முதன்மைக் குடிகளாகவும் தமிழர்களை வந்தேறு குடிகளாகவும் அடையாளப்படுத்தி வந்துள்ளனர். இலங்கையின் அரசியலமைப்பில் 9ம் பிரிவு மூலம் பௌத்த சமயம் இலங்கையின் முதன்மை சமயமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் புத்த சாசன அமைச்சு நிறுவப்பட்டு பௌத்த மதத்தை பாதுகாப்பது என்ற பெயரில் பல மில்லியன்கள் மஹாநாயக்கர்களுக்கும் ஏனைய பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கும் செலவிடப்படுவதோடு தமிழர் வாழும் பகுதிகளில் புதிய விகாரைகள் தொடர்ச்சியாக நிறுவப்பட்டு வருகின்றன. 2023 பாதீட்டில் மாத்திரம் 7940 மில்லியன்கள் புத்த சாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டதோடு அதன் மூலம் வாகனங்கள் உட்பட பல வசதிகளை தேரர்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறார்கள். காலங்காலமாக மன்னர்கள் காலத்தில் இருந்து சிங்கள தலைவர்கள் பௌத்தர்களின் ஆதரவை பெறுவதற்காக பல வசதிகளை தேரர்களுக்கு அளித்து வந்துள்ளனர். 2024 பாதீட்டில் இதே சூழ்ச்சியின் ஒரு வடிவமாக அடுத்த தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி ரணில், புத்தரினால் மொழியப்பட்ட சம்ஜிவிக்காத முறைப்படி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் ஏற்கெனவே 2023 இல் ஒதுக்கப்பட்டதை விட இம்முறை பௌத்த பல்கலைக்கழகம் நூதனசாலை நூல் நிலையம் உட்பட பல புதிய நிர்மாணங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதேவேளை தமிழர் வாழும் பிரதேசங்களில் -குருந்தூர் மலையில் இருந்து நாவற்குழி உட்பட பல இடங்களில்- விகாரைகள் நிறுவப்பட்டு விரிவு படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு சொல்லொன்று செயல் வேறு ஒன்றாக செயல்படும் பௌத்த தேரர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் உடன் ஏனைய மதத்தினரையும் இனத்தவரையும் சமனாக நடத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்துவது விவேகமான ஒரு செயலா என்ற கேள்வி எழுகின்றது. ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாக பீற்றிக்கொண்டிருக்கும் இமாலய பிரகடனத்தில் பின்வரும் விடயங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன:1. பன்மைத்துவத்தை ஊக்குவித்தல் 2. பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான பொருத்தமான வளர்ச்சி மாதிரியைத் தேர்ந்தெடுப்பது 3. போதுமான அதிகாரப் பகிர்வை வழங்கும் புதிய அரசியலமைப்பு மற்றும் அது உருவாகும் வரை தற்போதைய அரசியலமைப்பின் விதிகளை "விசுவாசமாக" செயல்படுத்துதல் 4. ஒன்றுபட்ட மற்றும் பிரிக்கப்படாத நாட்டில் அதிகாரங்களைப் பகிர்தல் 5. இறுதிவரை சமரசம் செய்து கொண்ட இலங்கையை நோக்கிய எதிர்காலப் பார்வை 6. சர்வதேச மற்றும் இருதரப்பு கடமைகளுக்கு இணங்குதல், நாடு செழிப்பான நாடுகளுக்கு மத்தியில் பெருமைப்படுவதை உறுதிப்படுத்துகிறது.இந்த 6 விடயங்களுள் குற்றங்களுக்கு பொறுப்பு கூறுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும் வழங்கும் விடயங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. ஈழத்தில் கொல்லப்பட்ட எனது தந்தை உட்பட பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்களுக்கு எந்தவித நியாயத்தையோ அல்லது நிவாரணத்தையோ அல்லது தமிழருக்கு தற்போதுள்ள ஒரே நம்பிக்கையான சமஷ்டி தீர்வு பற்றி எதுவுமே இமாலய பிரகடனத்தில் கூறப்படவில்லை. பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதியும் நிவாரணமும் வழங்காத எந்த தீர்வு திட்டமும் ஈழத்தில் எடுபடாது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என்ற அடிப்படை உண்மையை உலக தமிழர் பேரவை மறந்துவிட்டது. இனப்படுகொலையின் சூத்திரதாரிகளாக உலக தமிழர்களினால் குற்றம் சாட்டப்படும் மகிந்த, கோத்தபாய மற்றும் கெஹெலிய அவர்களின் கர்மவினை காரணமாக பல மோசடிகளில் ஈடுபட்டு இன்று சிங்களவர்களினாலும் வெறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பதவியில் இருந்த கோத்தபாய சிங்களவர்களினாலேயே பதவியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார். கெஹெலிய புதுவருட தினத்தன்று வெறுப்புக்கு உள்ளான சிங்களவர்களினால் மரண வீட்டு மலர்வளையம் வைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இவ்வாறு தாம் செய்த குற்றங்களுக்கான கர்மவினையை ராஜபக்சர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது எந்த வித பயனுமற்ற இமாலய பிரகடனம் என்ற ஒரு அர்த்தமில்லாத அறிக்கையை வெளியிடுவதற்காக உலக தமிழர் பேரவையினர் மகிந்தவை சந்தித்த நிகழ்வால் தாயகத்திலும் புலத்திலும் வசிக்கும் தமிழ் உணர்வாளர்கள் பெரும் வெறுப்படைந்து உள்ளனர். ஒருபுறம் கருப்பு ஜூலை, மாவீரர் தினம் என்று புலத்தை உசுப்பேத்தி கொண்டு மறுபுறம் தமிழருக்கு மாபெரும் அநீதியை இழைத்தவர்கள் உடன் கூடி குலவுகின்றனரா என்று கொதிப்பு அடைந்து உள்ளனர். உண்மையில் இமாலய பிரகடனம் ஜனாதிபதி ரணிலுக்கு சமஷ்டி தீர்வை பற்றி பேசாமல் புதிய அரசியலமைப்பு, மீண்டும் தமிழ் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கால தாமதத்தை ஏற்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஜனாதிபதி ரணிலுக்கு தேவையான அவகாசத்தை வழங்கியும், இன்னொரு தடவை தமிழ் மக்களின் வாக்குகளை ஏமாற்றி பெற்றுக் கொள்ளும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களுக்கு தேவையான நல்லிணக்கமும் தீர்வும் 8,12,2010 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கீழ்வரும் 3 முக்கிய விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்திருந்தேன். (ஆவணத்துக்கான இணைய இணைப்பு கீழ் தரப்பட்டுள்ளது. https://llrclk.files.wordpress.com/2011/02/submission-murali-vallipuranathan.pdf )1. போரினாலும் இனக்கலவரத்தாலும் கொல்லப்பட்ட பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை நேர்மையாக ஏற்றுக் கொண்டு உரிய நிவாரணத்தை வழங்குதல் 2. கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை ஏற்றுக் கொண்டு தடுப்புக்காவலில் வைத்து கொல்லப்பட்டவர்களை வெளிப்படுத்தி காணாமல் போனவர்களுக்கு முடிவு கட்டுதல் 3. தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை பாதுகாக்கும் அரசியல் தீர்வை வழங்குதல். இன்றைய சூழலில் அந்த அரசியல் தீர்வு சமஷ்டி தீர்வாகும். இந்த 3 விடயங்களையும் விடுத்து பம்மாத்துக் கதைகள் பேசி "நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறோம், மகா சங்கத்தின் ஆதரவுடன் வரலாற்றில் புதிய மாற்றம் கொண்டு வந்திருக்கிறோம்" என்று கூறிக்கொண்டு மீண்டும் ஒரு தடவை சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கி ஏமாந்து நிற்கும் தமிழ் தலைமைகளையும் அவர்களது பயனற்ற பிரகடனத்தையும், முற்றாக நிராகரிப்போம். நன்றி Dr முரளி வல்லிபுரநாதன்