• Apr 02 2025

அதிக விலைக்கு அரிசி விற்றால் இனி சிக்கல் - ஆரம்பமானது சுற்றிவளைப்பு

Chithra / Dec 10th 2024, 12:31 pm
image

 

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் வகையில் இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (09) அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

புதிய அரிசி விலை அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அதற்கு மேல் அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அரிசி விற்பனையில் ஏதேனும் முறையற்ற அல்லது அதிக விலை இருந்தால், அவர்கள் அதைப் பற்றி முறைப்பாடு செய்யலாம். 

நுகர்வோர் அதிகார சபையின் 1977 என்ற இலக்கத்திற்கு மாவட்ட அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

அதிக விலைக்கு அரிசி விற்றால் இனி சிக்கல் - ஆரம்பமானது சுற்றிவளைப்பு  அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் வகையில் இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் (09) அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.புதிய அரிசி விலை அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அதற்கு மேல் அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.அரிசி விற்பனையில் ஏதேனும் முறையற்ற அல்லது அதிக விலை இருந்தால், அவர்கள் அதைப் பற்றி முறைப்பாடு செய்யலாம். நுகர்வோர் அதிகார சபையின் 1977 என்ற இலக்கத்திற்கு மாவட்ட அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement