• Mar 31 2025

வன்னியில் 338 பேர் இதுவரை : தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளனர்!

Tharmini / Dec 10th 2024, 1:04 pm
image

வன்னி தேர்தல் மாவட்டத்தில் நேற்றுவரை 338 பேர் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சில தரப்புக்கள் பதிவுத்தபாலில் அவற்றை அனுப்பியுள்ளதால் கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,தங்களது தேர்தல் செலவு அறிக்கையை கடந்த 6ஆம் திகதி நள்ளிரவுக்கிடையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.  

அந்தவகையில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் நேற்றுவரை 14 அரசியல் கட்சிகள் மற்றும் 20 சுயேட்சைகுழுக்களை சேர்ந்தவர்கள் உட்பட338 பேர் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளதாக மாவட்டசெயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் வன்னிதேர்தல் மாவட்டத்தில்23 அரசியல்கட்சிகளும்25 சுயேட்சைக்குழுக்கள்என மொத்தமாக 48 தரப்புக்களை சேர்ந்த432 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 

அவர்களில் 5சுயேட்சைகுழுக்களினதும்9 அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 14தரப்புக்களின் செலவுஅறிக்கை நேற்றுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிலதரப்புக்கள் பதிவுத்தபாலில் செலவு அறிக்கையை அனுப்பிவைத்துள்ள நிலையில் அவை கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

வன்னியில் 338 பேர் இதுவரை : தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளனர் வன்னி தேர்தல் மாவட்டத்தில் நேற்றுவரை 338 பேர் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சில தரப்புக்கள் பதிவுத்தபாலில் அவற்றை அனுப்பியுள்ளதால் கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,தங்களது தேர்தல் செலவு அறிக்கையை கடந்த 6ஆம் திகதி நள்ளிரவுக்கிடையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.  அந்தவகையில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் நேற்றுவரை 14 அரசியல் கட்சிகள் மற்றும் 20 சுயேட்சைகுழுக்களை சேர்ந்தவர்கள் உட்பட338 பேர் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளதாக மாவட்டசெயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பாராளுமன்றத்தேர்தலில் வன்னிதேர்தல் மாவட்டத்தில்23 அரசியல்கட்சிகளும்25 சுயேட்சைக்குழுக்கள்என மொத்தமாக 48 தரப்புக்களை சேர்ந்த432 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களில் 5சுயேட்சைகுழுக்களினதும்9 அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 14தரப்புக்களின் செலவுஅறிக்கை நேற்றுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சிலதரப்புக்கள் பதிவுத்தபாலில் செலவு அறிக்கையை அனுப்பிவைத்துள்ள நிலையில் அவை கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Advertisement

Advertisement

Advertisement