உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு மானியமாக 55,000 மெற்றிக் தொன் மியூரேட் ஒப் பொட்டாஷ் உரத்தை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விடயத்துடன் தொடர்புடைய இருதரப்பு உடன்படிக்கை உலக உணவுத் திட்டம், உரல்கெம் - உரல்கலி குழு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஸ்டேட் பேர்டிலைசர் கம்பெனி ஆகியவற்றால் செப்டம்பர் 20 அன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
குறித்த உரக் களஞ்சியத்தை ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று நாட்டிற்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் உரக் களஞ்சியத்தை இலங்கை அரசிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் கொண்டு இந்த உரமானியம் வழங்கப்படவுள்ளது.
அதன்படி, மொத்த உரத்தில் 50% விவசாயிகளுக்கு நெல் மற்றும் பிற பயிர்களுக்குப் பயன்படுத்தவும், மீதமுள்ள 50% தென்னைச் செய்கைக்காகவும் விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு கிடைக்கவுள்ள உர மானியம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு மானியமாக 55,000 மெற்றிக் தொன் மியூரேட் ஒப் பொட்டாஷ் உரத்தை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.விடயத்துடன் தொடர்புடைய இருதரப்பு உடன்படிக்கை உலக உணவுத் திட்டம், உரல்கெம் - உரல்கலி குழு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஸ்டேட் பேர்டிலைசர் கம்பெனி ஆகியவற்றால் செப்டம்பர் 20 அன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.குறித்த உரக் களஞ்சியத்தை ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று நாட்டிற்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் உரக் களஞ்சியத்தை இலங்கை அரசிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் கொண்டு இந்த உரமானியம் வழங்கப்படவுள்ளது.அதன்படி, மொத்த உரத்தில் 50% விவசாயிகளுக்கு நெல் மற்றும் பிற பயிர்களுக்குப் பயன்படுத்தவும், மீதமுள்ள 50% தென்னைச் செய்கைக்காகவும் விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.