• May 20 2024

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு!

Tamil nila / Dec 11th 2022, 9:13 pm
image

Advertisement

எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி மாபெரும் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.



மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மட்டக்களப்பு பிரமிக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.


பிரமிக்கல்வி நிலையத்தின் பணிப்பாளரும் பிரபல ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தயார் படுத்தல் ஆசிரியருமான எஸ்.எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.முருகேசபிள்ளை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.



சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி எம்.தேவதாசன்,செங்கலடி அத்வி கல்வி நிலைய இயக்குனர் திருமதி எஸ்.ரமேஸ்வரன்,பிரமிக்கல்வி நிலைய ஆலோசகர் கே.ஈஸ்வரதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இந்த கருத்தரங்கில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் தோற்றும்போது மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள்,பரீட்சை வினாத்தாள்களில் விடையளிக்கும் முறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கு முதலாம்,இரண்டாம் பகுதி பரீட்சைகள் நடாத்தப்பட்டு அது தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.


இன்றைய கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி மாபெரும் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மட்டக்களப்பு பிரமிக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.பிரமிக்கல்வி நிலையத்தின் பணிப்பாளரும் பிரபல ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தயார் படுத்தல் ஆசிரியருமான எஸ்.எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.முருகேசபிள்ளை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி எம்.தேவதாசன்,செங்கலடி அத்வி கல்வி நிலைய இயக்குனர் திருமதி எஸ்.ரமேஸ்வரன்,பிரமிக்கல்வி நிலைய ஆலோசகர் கே.ஈஸ்வரதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இந்த கருத்தரங்கில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் தோற்றும்போது மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள்,பரீட்சை வினாத்தாள்களில் விடையளிக்கும் முறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கு முதலாம்,இரண்டாம் பகுதி பரீட்சைகள் நடாத்தப்பட்டு அது தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.இன்றைய கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement