• Jan 23 2025

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி அலி ஹமாதி சுட்டுக் கொலை

Tharmini / Jan 23rd 2025, 9:56 am
image

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் – காஸாவுக்கிடையிலான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு பெரும் ஆதரவுடன் செயற்பட்டனர்.

இந்நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இஸ்ரேல் – காஸா தரப்பினருக்கிடையில் போர் நிறுத்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது.

இவ்வாறிருக்க ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியாக ஷேக் முகமது அலி ஹமாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கிழக்கு லெபனானில் அமைந்துள்ள பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பே மர்ம நபர்கள் அவரை சுட்டுள்ளனர். இதில் 6 குண்டுகள் அவர் மீது பாய்ந்ததினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 1985 ஆம் ஆண்டு ரோம் நகரிலிருந்து ஏதேன்ஸ் நோக்கிச் சென்ற விமானத்தைக் கடத்தி அதில் அமெரிக்கர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அலி ஹமாதி அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார்.

இந்நிலையில் குடும்பத் தகராறின் காரணமாக அலி ஹமாதி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி அலி ஹமாதி சுட்டுக் கொலை லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் – காஸாவுக்கிடையிலான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு பெரும் ஆதரவுடன் செயற்பட்டனர்.இந்நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இஸ்ரேல் – காஸா தரப்பினருக்கிடையில் போர் நிறுத்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது.இவ்வாறிருக்க ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியாக ஷேக் முகமது அலி ஹமாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.கிழக்கு லெபனானில் அமைந்துள்ள பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பே மர்ம நபர்கள் அவரை சுட்டுள்ளனர். இதில் 6 குண்டுகள் அவர் மீது பாய்ந்ததினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.கடந்த 1985 ஆம் ஆண்டு ரோம் நகரிலிருந்து ஏதேன்ஸ் நோக்கிச் சென்ற விமானத்தைக் கடத்தி அதில் அமெரிக்கர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அலி ஹமாதி அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார்.இந்நிலையில் குடும்பத் தகராறின் காரணமாக அலி ஹமாதி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement