• Feb 14 2025

வவுனியாவில் தொடர்ச்சியாக வாகன பற்றரிகளை திருட்டுச் சம்பவம் - இருவர் கைது

Tharmini / Dec 17th 2024, 4:44 pm
image

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் வாகன பற்றரிகளை களவாடிய குற்றச்சாட்டில் இருவரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வாகன தரிப்பிடத்தில் வாகன பற்றரிகள் களவாடப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இரகசிய விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது நான்கு வாகன பற்றரிகளுடன் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தபட்ட என சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னினைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




வவுனியாவில் தொடர்ச்சியாக வாகன பற்றரிகளை திருட்டுச் சம்பவம் - இருவர் கைது வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் வாகன பற்றரிகளை களவாடிய குற்றச்சாட்டில் இருவரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த வாகன தரிப்பிடத்தில் வாகன பற்றரிகள் களவாடப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இரகசிய விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இதன் போது நான்கு வாகன பற்றரிகளுடன் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தபட்ட என சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னினைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement