• Nov 25 2024

ரணிலையும் சஜித்தையும் இணைக்க தீவிர முயற்சி - அனுரகுமார வெளியிட்ட தகவல்

Chithra / Sep 2nd 2024, 4:08 pm
image


ஜனாதிபதியினதும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரினதும்  இரண்டாம் நிலை  தலைவர்கள் இருவரையும் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள சாதகமான  நிலையை மாற்றியமைப்பதற்காக ஜனாதிபதியினதும் எதிர்கட்சி தலைவரினதும் பிரச்சார பிரிவில் இரண்டாம் நிலையில் உள்ள  தலைவர்கள் இருவரையும இணைந்து செயற்பட செய்வது தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர் என அனுரகுமார  ஹோமகவில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித்பிரேமதாசவிற்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்ற அதேவேளை இரண்டு தரப்பினதும் இரண்டாம் நிலையை  சேர்ந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்க முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் நிலையில் தலைவர்கள் மத்தியில்  பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன,

நாம் பிரிந்திருப்பது விவேகமானதா இல்லையா? நாம் ஒன்று கூடி தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை மாற்றியமைக்க ஏதாவது செய்ய முடியாத என அவர்கள் பேசிக்கொள்கின்றார்கள் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணிலையும் சஜித்தையும் இணைக்க தீவிர முயற்சி - அனுரகுமார வெளியிட்ட தகவல் ஜனாதிபதியினதும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரினதும்  இரண்டாம் நிலை  தலைவர்கள் இருவரையும் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள சாதகமான  நிலையை மாற்றியமைப்பதற்காக ஜனாதிபதியினதும் எதிர்கட்சி தலைவரினதும் பிரச்சார பிரிவில் இரண்டாம் நிலையில் உள்ள  தலைவர்கள் இருவரையும இணைந்து செயற்பட செய்வது தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர் என அனுரகுமார  ஹோமகவில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித்பிரேமதாசவிற்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்ற அதேவேளை இரண்டு தரப்பினதும் இரண்டாம் நிலையை  சேர்ந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்க முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.இரண்டாம் நிலையில் தலைவர்கள் மத்தியில்  பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன,நாம் பிரிந்திருப்பது விவேகமானதா இல்லையா நாம் ஒன்று கூடி தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை மாற்றியமைக்க ஏதாவது செய்ய முடியாத என அவர்கள் பேசிக்கொள்கின்றார்கள் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement