• Nov 23 2024

ஆளுங்கட்சியின் எம்.பிக்கள் பலர் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு

Chithra / May 20th 2024, 8:38 am
image


"ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆளும் - எதிரணி எம்.பிக்கள் பலர் விரைவில் இணையவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது."- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கால எல்லை இன்னும் வரவில்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தல் முதலில் என்பது உறுதி. ஒக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடும்.

நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரிக்கை விடுக்கும் அதிகாரம் உறுப்பினர்களுக்கு இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. 

எனவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேவையற்ற பிரச்சினைக்கு அவர் வழிசமைக்கமாட்டார். ஆளுங்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலையே முதலில் கோருகின்றனர்." - என்றார்.

ஆளுங்கட்சியின் எம்.பிக்கள் பலர் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு "ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆளும் - எதிரணி எம்.பிக்கள் பலர் விரைவில் இணையவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது."- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான ஆசு மாரசிங்க தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,"அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கால எல்லை இன்னும் வரவில்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தல் முதலில் என்பது உறுதி. ஒக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடும்.நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரிக்கை விடுக்கும் அதிகாரம் உறுப்பினர்களுக்கு இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. எனவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேவையற்ற பிரச்சினைக்கு அவர் வழிசமைக்கமாட்டார். ஆளுங்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலையே முதலில் கோருகின்றனர்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement