• Sep 13 2025

அடுத்த 36 மணிநேரத்தில் பல தடவைகள் மழை ; காற்று, மின்னலுடன் தாக்கம் ஏற்படலாம்!

shanuja / Sep 12th 2025, 9:22 pm
image

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, 


அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


நாட்டின் இன்னும் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையுடனான காலநிலையில்  பலத்த காற்றும் வீசும். அத்துடன் இடிமின்னலும் ஏற்படலாம்.

 

இடியுடன் கூடிய மழையுடன் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான  நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த 36 மணிநேரத்தில் பல தடவைகள் மழை ; காற்று, மின்னலுடன் தாக்கம் ஏற்படலாம் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் இன்னும் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையுடனான காலநிலையில்  பலத்த காற்றும் வீசும். அத்துடன் இடிமின்னலும் ஏற்படலாம். இடியுடன் கூடிய மழையுடன் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான  நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement