• Mar 13 2025

அனுராதபுர வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்: சபையில் விடுத்த சஜித் கோரிக்கை..!

Sharmi / Mar 11th 2025, 3:49 pm
image

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெளிநபர் ஒருவர் வைத்தியரை அவரது பணி அறைக்குள் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அண்மைக் காலங்களில் இலங்கையில் வைத்தியசாலைகளின் உள்ளே இவ்வாறான சம்பவங்கள் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை.

அரச வைத்தியசாலையில் பணியில் இருக்கும் வைத்தியர் ஒருவர் இலக்கு வைக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக பாரிய கேள்வி எழுந்திருக்கிறது. நான் அரசாங்கத்தை கேட்க விரும்புகிறேன். அரசாங்கத்திற்கு இந்த சம்பவம் தொடர்பாக தெரியுமா? 

இத்தகைய ஒரு பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த இந்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து தெரியுமா எப்போது அரசாங்கம் அது பற்றி அறிந்து கொண்டது? இது தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது?

ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். பெண்கள், பெண் வைத்தியர்கள், தொழில் செய்கின்ற அத்தனை பெண்களும் முகம் கொடுக்கின்ற இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக நாங்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறோம்? மகளிர் எதிர் கொள்ளுகின்ற இத்தகைய பிரச்சினைகள் குறித்து மகளிர் தினத்தில் இந்த சபையில் நாம் பேசினோம்.

அந்த மகளிர் தினத்தை நாம் கொண்டாடினோம். விருந்துபசாரத்தை கொண்டாடினோம். இது எவ்வளவு பாரதூரமானது என்பதனை இந்த சபையில் உள்ளவர்கள் அனைவரும் உணர்வார்கள் என்று நம்புகிறேன். உணர்ந்தால் மட்டும் போதாது பெண்கள் குலத்தை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கப் போகின்ற நடவடிக்கை என்ன? எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.


அனுராதபுர வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்: சபையில் விடுத்த சஜித் கோரிக்கை. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச கோரிக்கை விடுத்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“வெளிநபர் ஒருவர் வைத்தியரை அவரது பணி அறைக்குள் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அண்மைக் காலங்களில் இலங்கையில் வைத்தியசாலைகளின் உள்ளே இவ்வாறான சம்பவங்கள் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை.அரச வைத்தியசாலையில் பணியில் இருக்கும் வைத்தியர் ஒருவர் இலக்கு வைக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது.பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக பாரிய கேள்வி எழுந்திருக்கிறது. நான் அரசாங்கத்தை கேட்க விரும்புகிறேன். அரசாங்கத்திற்கு இந்த சம்பவம் தொடர்பாக தெரியுமா இத்தகைய ஒரு பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த இந்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து தெரியுமா எப்போது அரசாங்கம் அது பற்றி அறிந்து கொண்டது இது தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறதுஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். பெண்கள், பெண் வைத்தியர்கள், தொழில் செய்கின்ற அத்தனை பெண்களும் முகம் கொடுக்கின்ற இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக நாங்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறோம் மகளிர் எதிர் கொள்ளுகின்ற இத்தகைய பிரச்சினைகள் குறித்து மகளிர் தினத்தில் இந்த சபையில் நாம் பேசினோம். அந்த மகளிர் தினத்தை நாம் கொண்டாடினோம். விருந்துபசாரத்தை கொண்டாடினோம். இது எவ்வளவு பாரதூரமானது என்பதனை இந்த சபையில் உள்ளவர்கள் அனைவரும் உணர்வார்கள் என்று நம்புகிறேன். உணர்ந்தால் மட்டும் போதாது பெண்கள் குலத்தை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கப் போகின்ற நடவடிக்கை என்ன எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement