• Apr 02 2025

Thansita / Mar 31st 2025, 7:29 pm
image

இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தலைவராக ஷம்மி சில்வா (Shammi Silva) நான்காவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று (31) நடைபெற்ற சபையின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் 2025 முதல் 2027 வரையிலான இரண்டு ஆண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் துணைத் தலைவர்களாக ஜெயந்த தர்மதாச மற்றும் ரவின் விக்ரமரத்ன ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பந்துல திசாநாயக்க செயலாளர் பதவிக்கு தெரிவாகியுள்ளார். 

இதே நேரம், இன்றைய தினமே இவர்கள் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

4வது முறையாக மீண்டும் தலைவராக ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தலைவராக ஷம்மி சில்வா (Shammi Silva) நான்காவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இன்று (31) நடைபெற்ற சபையின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்த நியமனம் 2025 முதல் 2027 வரையிலான இரண்டு ஆண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் துணைத் தலைவர்களாக ஜெயந்த தர்மதாச மற்றும் ரவின் விக்ரமரத்ன ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பந்துல திசாநாயக்க செயலாளர் பதவிக்கு தெரிவாகியுள்ளார். இதே நேரம், இன்றைய தினமே இவர்கள் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement