• Dec 28 2024

கழுத்தில் பாய்ந்த கூரிய தடி; முதியவரின் உயிரை காப்பாற்றிய வைத்தியர்கள்! வவுனியாவில் சம்பவம்

Chithra / Dec 25th 2024, 1:42 pm
image


கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையால் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

குறித்த சத்திரசிகிச்சை நேற்று இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

முதியவர் ஒருவரின் கழுத்தில் கூரிய தடி ஒன்று குற்றி மறுபக்கம் வந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த முதியவருக்கு வைத்தியசாலையில் உரிய நேரத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சை மூலம் அவரது கழுத்தில் குற்றிய தடி அகற்றப்பட்டதுடன், அவர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இவ் வெற்றிகரமான சத்திரசிகிச்சையினை உணர்வழியியல் மருத்துவ நிபுணர், மயக்கமருந்து (Anesthesia) அணியினருடன் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கழுத்தில் பாய்ந்த கூரிய தடி; முதியவரின் உயிரை காப்பாற்றிய வைத்தியர்கள் வவுனியாவில் சம்பவம் கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையால் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.குறித்த சத்திரசிகிச்சை நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,முதியவர் ஒருவரின் கழுத்தில் கூரிய தடி ஒன்று குற்றி மறுபக்கம் வந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.குறித்த முதியவருக்கு வைத்தியசாலையில் உரிய நேரத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சை மூலம் அவரது கழுத்தில் குற்றிய தடி அகற்றப்பட்டதுடன், அவர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.இவ் வெற்றிகரமான சத்திரசிகிச்சையினை உணர்வழியியல் மருத்துவ நிபுணர், மயக்கமருந்து (Anesthesia) அணியினருடன் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement