• Nov 24 2024

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா; இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Chithra / Aug 5th 2024, 3:33 pm
image

 பங்களாதேஷில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2500 இலங்கையர்கள் பங்களாதேஷில் வசித்தவரும் நிலையில் இலங்கை சமூகமும் பாதுகாப்பாக இருப்பதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பங்களாதேஷில் உள்ள இலங்கையர்களில் தற்போது ஒன்பது மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதாகவும் இவர்களில் எட்டு மாணவர்கள் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ளதுடன் மீதமுள்ள மாணவர் பாதுகாப்பாக டாக்காவில் உள்ள உறவினர்களுடன் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்.

அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச  செய்திகள் தெரிவிக்கின்றன. 

 ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  300  ஆக அதிகரித்துள்ளது.

படவிளக்கம்

இவர்களில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

அத்துடன், ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பங்களாதேஷ் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தினர்.

அதேநேரம் நேற்று முதல் பங்களாதேஷில் காலவரையற்ற முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், இன்று முதல் 3 நாட்கள் பொது விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இணைய சேவைகளை முடக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

அவர்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டமானது பின்னர் அந்த நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டதுடன், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா; இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு  பங்களாதேஷில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி 2500 இலங்கையர்கள் பங்களாதேஷில் வசித்தவரும் நிலையில் இலங்கை சமூகமும் பாதுகாப்பாக இருப்பதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.இதேவேளை பங்களாதேஷில் உள்ள இலங்கையர்களில் தற்போது ஒன்பது மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதாகவும் இவர்களில் எட்டு மாணவர்கள் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ளதுடன் மீதமுள்ள மாணவர் பாதுகாப்பாக டாக்காவில் உள்ள உறவினர்களுடன் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்.அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச  செய்திகள் தெரிவிக்கின்றன.  ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  300  ஆக அதிகரித்துள்ளது.படவிளக்கம்இவர்களில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.அத்துடன், ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பங்களாதேஷ் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தினர்.அதேநேரம் நேற்று முதல் பங்களாதேஷில் காலவரையற்ற முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், இன்று முதல் 3 நாட்கள் பொது விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இணைய சேவைகளை முடக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.அவர்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டமானது பின்னர் அந்த நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டதுடன், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement