• Sep 30 2024

மக்களுக்கு அதிர்ச்சி: 60 வீதத்தால் அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்..! samugammedia

Tamil nila / Dec 13th 2023, 6:58 am
image

Advertisement

எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் இலங்கையில் விதிக்கப்படவுள்ள 18 சதவீத வட் வரி மூலம் நாட்டில் விலைவாசி பாரியளவில் உயர்வடையவுள்ளதாக இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஜாதிக சேவக சங்கமய தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பெறுமதி சேர் வரியான வட் வரியை விதித்த பின்னர், தற்போது 346 ரூபாயாக விற்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோல் 62.28 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 408.28என்ற புதிய சில்லறை விலையில் விற்கப்படும்.

அதேநேரம் ஒரு லீட்டர் டீசல் 59.22 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலையாக 388.22 ஆக விற்பனை செய்யப்படும்.

தற்போது, அரசாங்கம் சமூக பாதுகாப்பு வரி, மதுவரி, சுங்க வரி மற்றும் துறைமுக பாதுகாப்பு வரி என நான்கு வகையான வரிகளை வசூலிக்கிறது.

இந்தநிலையில் மின்சார கட்டணத்தில் வரி சேர்க்கப்படாது என அரசு கூறுகிறது. 

ஆனால், நாட்டின் மொத்த மின் உற்பத்திக்கு 40 சதவீதம் எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது.

எனவே டீசல் மீதான வட் வரி விதித்தப்பட்ட பின்னர், மின்சாரம் சரிசெய்தல் கட்டணத்திற்கு ஏற்ப மின்சாரக் கட்டணங்களும் நிச்சயமாக அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

மக்களுக்கு அதிர்ச்சி: 60 வீதத்தால் அதிகரிக்கும் பொருட்களின் விலைகள். samugammedia எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் இலங்கையில் விதிக்கப்படவுள்ள 18 சதவீத வட் வரி மூலம் நாட்டில் விலைவாசி பாரியளவில் உயர்வடையவுள்ளதாக இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஜாதிக சேவக சங்கமய தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,பெறுமதி சேர் வரியான வட் வரியை விதித்த பின்னர், தற்போது 346 ரூபாயாக விற்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோல் 62.28 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 408.28என்ற புதிய சில்லறை விலையில் விற்கப்படும்.அதேநேரம் ஒரு லீட்டர் டீசல் 59.22 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலையாக 388.22 ஆக விற்பனை செய்யப்படும்.தற்போது, அரசாங்கம் சமூக பாதுகாப்பு வரி, மதுவரி, சுங்க வரி மற்றும் துறைமுக பாதுகாப்பு வரி என நான்கு வகையான வரிகளை வசூலிக்கிறது.இந்தநிலையில் மின்சார கட்டணத்தில் வரி சேர்க்கப்படாது என அரசு கூறுகிறது. ஆனால், நாட்டின் மொத்த மின் உற்பத்திக்கு 40 சதவீதம் எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது.எனவே டீசல் மீதான வட் வரி விதித்தப்பட்ட பின்னர், மின்சாரம் சரிசெய்தல் கட்டணத்திற்கு ஏற்ப மின்சாரக் கட்டணங்களும் நிச்சயமாக அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement