• May 17 2024

மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரிசி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

Chithra / Apr 22nd 2024, 9:36 am
image

Advertisement

 

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையிலே குறித்த அரிசி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூச்சி சேதம் காரணமாக குறித்த அரிசி இருப்பு பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன  தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் இந்த அரிசி தொகை வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரிசி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்  பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையிலே குறித்த அரிசி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பூச்சி சேதம் காரணமாக குறித்த அரிசி இருப்பு பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன  தெரிவித்துள்ளார்.பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் இந்த அரிசி தொகை வழங்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement