• May 18 2024

பசில் ராஜபக்சவின் மல்வானை இல்லத்திற்கு ஏற்பட்ட நிலை...! நிதியமைச்சிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை...!

Sharmi / Apr 22nd 2024, 9:36 am
image

Advertisement

நாட்டில்  பெரும் சர்ச்சையை  ஏற்படுத்திய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் கம்பஹா மல்வானை இல்லத்தை கால்நடை பராமரிப்பு நடவடிக்கைக்கு வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடைப் பண்ணைகளில் கடமையாற்றிய உத்தியோகத்தரால் நிதியமைச்சிடம் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, நீதிமன்ற தீர்ப்பின்படி பசில் ராஜபக்சவின் மல்வானை இல்லம் உள்ளிட்ட சொத்துக்கள் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், குறித்த கோரிக்கையை கையாள்வது தொடர்பாக அறிந்து கொள்வதற்காக பிரேரணை அமைச்சின் சட்ட திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மல்வானை இல்லம் மற்றும் காணி தொடர்பில் நீதி அமைச்சு தீர்மானம் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்துகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தினால் நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள மல்வானை இல்லத்தை அவதானித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பசில் ராஜபக்சவின் மல்வானை இல்லத்திற்கு ஏற்பட்ட நிலை. நிதியமைச்சிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை. நாட்டில்  பெரும் சர்ச்சையை  ஏற்படுத்திய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் கம்பஹா மல்வானை இல்லத்தை கால்நடை பராமரிப்பு நடவடிக்கைக்கு வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடைப் பண்ணைகளில் கடமையாற்றிய உத்தியோகத்தரால் நிதியமைச்சிடம் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே, நீதிமன்ற தீர்ப்பின்படி பசில் ராஜபக்சவின் மல்வானை இல்லம் உள்ளிட்ட சொத்துக்கள் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இருப்பினும், குறித்த கோரிக்கையை கையாள்வது தொடர்பாக அறிந்து கொள்வதற்காக பிரேரணை அமைச்சின் சட்ட திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மல்வானை இல்லம் மற்றும் காணி தொடர்பில் நீதி அமைச்சு தீர்மானம் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்துகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நீதிமன்றத்தினால் நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள மல்வானை இல்லத்தை அவதானித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement