ஐபோனுக்காக 8 வயது தங்கையை 12 வயது சிறுமி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் சிறுமிகள் 2 பேர் பள்ளியில் படித்து வந்த நிலையில் கோடை விடுமுறைக்காக டென்னிசியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பெற்றோர்களுடன் சென்றுள்ளனர்.அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது ஐபோன் தொடர்பாக அக்கா, தங்கை இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
கோபமடைந்த 12 வயது சிறுமி தனது தங்கை தூங்கும் போது கழுத்தை நெரித்துள்ளார். இந்த சம்பவத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு தங்கை உயிரிழந்துள்ளார். மேலும், தன் மீது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் குற்றத்தை மறைக்க தங்கையின் உடலை கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைத்துள்ளார்.
8 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் வீடு முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் சிறுமி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
குறித்த இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிறுமி டெமரியா ஹோலிங்ஸ்வொர்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் பெற்றோரின் புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து 12 வயது சிறுமியை கைது செய்து சிற்றார் சிறையில் அடைத்தனர்.
8 வயது தங்கையை கொலை செய்த அக்கா- வெளியான அதிர்ச்சி காரணம் ஐபோனுக்காக 8 வயது தங்கையை 12 வயது சிறுமி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவில் சிறுமிகள் 2 பேர் பள்ளியில் படித்து வந்த நிலையில் கோடை விடுமுறைக்காக டென்னிசியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பெற்றோர்களுடன் சென்றுள்ளனர்.அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது ஐபோன் தொடர்பாக அக்கா, தங்கை இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.கோபமடைந்த 12 வயது சிறுமி தனது தங்கை தூங்கும் போது கழுத்தை நெரித்துள்ளார். இந்த சம்பவத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு தங்கை உயிரிழந்துள்ளார். மேலும், தன் மீது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் குற்றத்தை மறைக்க தங்கையின் உடலை கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைத்துள்ளார்.8 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் வீடு முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் சிறுமி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.குறித்த இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிறுமி டெமரியா ஹோலிங்ஸ்வொர்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் பெற்றோரின் புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து 12 வயது சிறுமியை கைது செய்து சிற்றார் சிறையில் அடைத்தனர்.